- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ராவால் கூட முடியாது.. ஓவர்நைட்ல பஸ்பால்ன்னு பெயர் வைக்கிறது முக்கியமல்ல.. இதை செய்யணும்.. தோனி கருத்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக வந்த பின் அதிரடியாக விளையாடுகிறோம் என்று அணுகு முறையை கையிலெடுத்துள்ளது. அதைப் பின்பற்றி சொந்த மண்ணில் வெற்றிகளை பெற்ற அந்த அணியின் அணுகுமுறைக்கு பஸ்பால் என்று பெயர் வைத்து இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் அந்த அணுகுமுறையை பின்பற்றி இந்தியா போன்ற வெளிநாடுகளில் இங்கிலாந்து அணியால் தொடர்ச்சியாக வெற்றி பெற முடியவில்லை.

அதன் காரணமாக பஸ்பால் என்பது முட்டாள்தனமானது என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜெஃப்ரி பாய்காட் சமீபத்தில் விமர்சித்திருந்தார். இந்நிலையில் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட ஸ்டைலில் விளையாடும் அணுகுமுறைக்கு பஸ்பால் உட்பட எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி கூறியுள்ளார். ஆனால் அந்த அணுகுமுறையை ஒரே இரவில் உருவாக்கி பின்பற்றுவது வெற்றியை கொடுக்காது என்று தோனி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

உண்மையான அதிரடி:

மாறாக நம்முடைய அணியில் வீரர்களின் பலம் என்ன என்பதை அறிந்து அதற்கு தகுந்த அணுகுமுறையில் விளையாட வேண்டும் என்று தோனி கூறியுள்ளார். அதை உருவாக்குவதற்கு நீண்ட நேரம் தேவைப்படும் என்றும் தெரிவிக்கும் தோனி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டில் நீங்கள் விரும்பும் விஷயத்திற்கு எந்த பெயரை வேண்டுமானாலும் கொடுக்கலாம்”

“உண்மையில் கிரிக்கெட் முன்னேறியுள்ளதை நாம் பார்க்கிறோம். தற்போதுள்ள வீரர்கள் விளையாடுவதும் வித்தியாசமாக இருக்கிறது. ஒரு காலத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் பாதுகாப்பாக இருந்த குறிப்பிட்ட ஸ்கோர் இன்று டி20 கிரிக்கெட்டின் வருகையால் பாதுகாப்புடன் இல்லை. ஒரு அணுகுமுறைக்கு நீங்கள் குறிப்பிட்ட பெயர் கொடுக்கும் போது அது சுவாரசியமாக இருக்கும். ஏனெனில் அதைப்பற்றி பேசும் நீங்கள் உங்களை அதனுடன் தொடர்பு செய்து கொள்ளத் துவங்குவீர்கள்”

- Advertisement -

ஒரே நாளில் முடியாது:

“ஆனால் நாளின் இறுதியில் அது என்ன? அது கிரிக்கெட்டை விளையாடும் ஒரு வழியாகும். சிலர் அதிரடியான கிரிக்கெட்டையும் சிலர் நிதான கிரிக்கெட்டையும் விளையாட விரும்புவார்கள். ஆனால் அது நீங்கள் அணியை எவ்வாறு பெற்றுள்ளீர்கள்? நமது வீரர்களால் அவர்களின் கிரிக்கெட்டை மாற்றி விளையாட முடியுமா? என்பதைப் பொறுத்தது. ஏனெனில் சிலரால் அப்படி விளையாட முடியும். அனைவராலும் அப்படி விளையாட முடியாது”

இதையும் படிங்க: ஒன்னா விளையாடியும் விராட் கோலி என்னை இன்ஸ்டாகிராமில் ப்ளாக் பண்ணிட்டாரு.. மேக்ஸ்வெல் பேட்டி

“எடுத்துக்காட்டாக பும்ரா 6 பந்துகளையும் யார்கராக வீசும் திறமை கொண்டவர். அவரால் அதை செய்ய முடியும். ஆனால் அதை செய்யும் போது அவர் நிறைய ரன்களை வாரி வழங்க நேரிடலாம். எனவே உங்களுடைய அணியின் பலம் என்ன என்பதைப் பொறுத்து நீங்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். ஆனால் அதை இன்று இரவு உருவாக்கி நாளை செய்ய முடியாது. உங்கள் வீரர்களுக்கு போதுமான நேரத்தை வழங்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -