- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கஷ்டமான காலத்தில் நண்பனாக விராட் கோலிக்கு அனுப்பிய மெசேஜ் என்ன? 2022 பின்னணி குறித்து தோனி பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2022 ஜனவரி மாதத்துடன் டெஸ்ட் கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்தார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டனாக வரலாறு படைத்த அவர் வெளிநாடுகளில் மிகச் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை முந்தி அதிக வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

இருப்பினும் உலகக்கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக விமர்சனங்களை சந்தித்த அவர் 2021 டி20 உலகக் கோப்பையுடன் 20 ஓவர் இந்திய அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை மட்டும் ராஜினாமா செய்தார். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர விரும்புவதாக விராட் கோலி கூறியிருந்தார். ஆனால் அப்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்று பிசிசிஐ, தேர்வுக்குழு கருதியது.

- Advertisement -

தோனியின் மெசேஜ்:

அதனால் விராட் கோலியிடம் இருந்த ஒருநாள் கேப்டன்ஷிப் பொறுப்பை வலுக்கட்டாயமாக பறித்த பிசிசிஐ ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தது. அதனால் ஏமாற்றமடைந்த விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது கேப்டன்ஷிப் மாற்றம் பற்றி தம்மிடம் 1 மணி நேரம் முன்பாகத்தான் தெரிவிக்கப்பட்டதாக விராட் கோலி கூறினார்.

மேலும் அந்த கடினமான காலங்களில் யாருமே தமக்கு ஆதரவு கொடுக்காத நிலையில் எம்.எஸ். தோனி மட்டுமே மெசேஜ் செய்து நண்பனாக ஆதரவை தெரிவித்ததாக விராட் கோலி கூறியிருந்தார். இந்நிலையில் 2022இல் விராட் கோலிக்கு கடினமான நேரத்தில் என்ன மெசேஜ் செய்தீர்கள்? என்று சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் தோனியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கான பதில் 2025 ஐபிஎல் தொடரின் போது தெரிய வரும் என்று தோனி தெரிவித்தார்.

- Advertisement -

காரணம் என்ன:

மேலும் விராட் கோலிக்கு ஏன் மெசேஜ் செய்தேன் என்ற காரணத்தை தோனி தெரிவித்துள்ளார். இது பற்றி தோனி பேசியது பின்வருமாறு. “இதே போன்ற கேள்வியை ஜியோ ஹாட்ஸ்டார் சேனலில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் என்னிடம் கேட்டார்கள். எனவே அதற்கான பதிலை நீங்கள் ஐபிஎல் தொடரின் போது பார்ப்பீர்கள்”

இதையும் படிங்க: இந்தவொரு சாதகம் போதும்.. கண்டிப்பா சாம்பியன்ஸ் டிராபி கப் இந்திய அணிக்கு தான் – நாசர் ஹுசேன் கருத்து

“சக வீரர்களுடன் தொடர்பில் இருப்பதில் நான் சிறந்த நபர் கிடையாது. ஆனால் ஆம் சில நேரங்களில் சில நபர்களுக்கு நீங்கள் தேவைப்படுவீர்கள். அது போன்ற சமயங்களில் அவர்களுக்கு நீங்கள் மெசேஜ் செய்ய வேண்டும்” என்று கூறினார். அதாவது இதே கேள்விக்கான பதிலை ஜியோ ஹாட்ஸ்டார் சேனலில் கூறியதாக தோனி தெரிவித்துள்ளார். அது ஐபிஎல் தொடரின் போது அந்த சேனலில் தெரிய வரும் என்று அவர் ட்விஸ்ட் வைத்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -