இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக மாற தோனிக்கு வாய்ப்பே இல்லை. ஏன் தெரியுமா? – விவரம் இதோ

MS
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வருகிறது. இந்த தொடருக்கு அடுத்து மேலும் இந்திய அணியுடன் தொடர விரும்பவில்லை என்று டிராவிட் அறிவித்து விட்டதால் இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான தேடலை தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தீவிரப்படுத்தி உள்ளது. அந்த வகையில் இந்த புதிய பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் மே 27-ஆம் தேதி வரை பெறப்பட்டன.

அப்படி வந்துள்ள 3000-திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தகுதியான நபரை அடுத்த பயிற்சியாளராக தேர்வு செய்ய இருக்கிறோம் என பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய் ஷா ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த பயிற்சியாளர் பதவிக்காக பல்வேறு முன்னாள் வீரர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், கொல்கத்தா அணியின் ஆலோசகரான கௌதம் கம்பீர், குஜராத் அணியின் பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன் போன்றவருடன் பிசிசிஐ நேரடியாக பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டதாக கூறப்பட்டது. அதேபோன்று இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக தோனி வந்தால் சிறப்பாக இருக்கும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தோனி இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் விதிமுறைப்படி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 வயதுக்கு குறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதேபோன்று டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து பெற்ற அணிக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும்.

- Advertisement -

மேலும் ஐபிஎல் அணியின் அசோசியேட் உறுப்பினராக மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். அதோடு இந்திய அணிக்காக குறைந்தது 30 டெஸ்ட் போட்டி அல்லது 50 ஒருநாள் போட்டியிளாவது விளையாடி இருக்க வேண்டும். இந்த மூன்று சான்றிதழை பெற்று இருந்தால் மட்டுமே பயிற்சியாளராக அந்த நபர் ஏற்புடையவராக இருப்பார்.

இதையும் படிங்க : காபாவில் இதை செஞ்சு.. அலெஸ்டர் குக், என்னோட சாதனையை ஷேர் பண்ணுங்க.. கோலிக்கு கவாஸ்கர் கோரிக்கை

அதோடு புதிய பயிற்சியாளராக வரவிருக்கும் நபர் சர்வதேச போட்டியிலோ அல்லது வேறு எந்த தொடரிலோ விளையாடும் வீரராக இருக்கக்கூடாது. தோனி மூன்று ஃபார்மெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடி கோப்பைகளை பெற்று கொடுத்திருந்தாலும் தற்போது அவர் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறாமல் இருந்து வருவதால் அவரை பயிற்சியாளராக தேர்வு செய்ய யாராலும் முடியாது என்று கூறப்படுகிறது.

Advertisement