இந்திய அளவில் சாதனை.! தோனிதான் இதிலும் டாப்.! பராக் ஒபாமாவை பின்னுக்குத் தள்ளினார்!

dhoni--Barack-Obama

இந்திய கிரிக்கெட் உலகில் சச்சினிற்கு பிறகு ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டவர் தோனி தான். இந்திய அணியின் முன்னாள் வீரரான தோனி இந்திய அணிக்காக மூன்று உலக கோப்பையை வென்று கொடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை உடையவர். தற்போது இவரது பெருமைக்கு மேலும் ஒரு கெளரவம் கிடைத்துள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்தை சேர்ந்த yougov.co.uk என்ற இணையதளம் ஒன்று ஒவ்வொரு நாட்டின் மக்களால் விரும்பப்படுகிற பிரபலமானவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் தோனி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். 40 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில் தோனிக்கு 7.7 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த பட்டியலின் முதல் இடத்தில் பிரதமர் மோடி இருக்கிறார்.

ஆனால், கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் தோனி தான் நாட்டின் பிரபலமானவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். தோனிக்கு அடுத்த 6.80 சதவிகித வாக்குகள் பெற்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் இரண்டாவது இடத்திலும், 4.8 சதவிகித வாக்குகள் பெற்று தற்போதைய இந்திய அணியின் கேப்டன் கோலி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

dhoni

இந்திய அளவில் எடுத்துக்கொண்டால் இந்த பட்டியலில் தோனிக்கு பின்னர் தான் அமிதாப் பச்சன், ரத்தன் டாடா, அக்ஷேய் குமார், ஷாருக்கான் ஆகியோர் இருக்கின்றனர். இந்திய அளவில் மக்களால் அதிகம் விரும்பப்படுவராக விளையாட்டு வீர்கள் பட்டியலில் தோனி முதல் இடத்தில் இருப்பது அவரது ரசிகர்களுக்கு மிகவும் சந்தோசமான ஒரு விடயமாக அமைந்துள்ளது.