MS Dhoni : தோனியின் இந்த செஞ்சுரி ராசி நிச்சயம் இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தரும் – விவரம் இதோ

இந்திய அணி நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இன்று கலந்து கொண்டு விளையாடியாது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது

Dhoni
- Advertisement -

இந்திய அணி நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இன்று கலந்து கொண்டு விளையாடியாது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது இந்த போட்டியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா 19 ரன்களிலும் தவான் ஒரு ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றினர்.

- Advertisement -

அடுத்து வந்த விராத் கோலி 47 ரன்கள் அடித்து ஓரளவுக்கு ஆறுதல் அளித்தார். அதன் பின்னர் ராகுல் சிறப்பாக விளையாடி 99 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இந்த பயிற்சி போட்டியில் விஜய்சங்கர் 2 ரன்கள் எடுத்து சோபிக்க தவறினார். பின்னர் தோனி அதிரடியாக ஆடி 78 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் தோனி 99 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடித்து தனது சதத்தை பதிவு செய்தார்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 359 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 370 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Kohli

இந்நிலையில் இந்த பயிற்சி போட்டியில் தோனி அடித்த சதத்தின் மூலம் அவருடைய ராசிக்கு 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் இதோ கடந்த 2011ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்ட போது இந்திய அணி கலந்து கொண்ட இரண்டாவது பயிற்சி போட்டியில் தோனி 64 பந்தில் 108 ரன்கள் அடித்தார். இந்த தொடரில் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது.

yuvidhoni

அதேபோன்று 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் தோனி 77 பந்துகளில் 91 ரன்களை எடுத்தார் அந்த கோப்பையையும் இந்தியா வென்றது அதனால் இந்த பயிற்சி போட்டியில் தோனி 78 பந்துகளில் 113 ரன்கள் அடித்ததால் இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி கைப்பற்றும் என்று தோனியின் ரசிகர்கள் தோனியின் ராசியை வைத்து சென்டிமென்டாக இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement