- Advertisement -
ஐ.பி.எல்

தோனி இந்த சீசனோடு ரிட்டயர்டு ஆகப்போறது உறுதி.. அதுக்காகத்தான் இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்குது – விவரம் இதோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் மஹேந்திர சிங் தோனி கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது கோப்பையை வென்ற கையோடு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் தான் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவேன் என்று அறிவித்த தோனி அடுத்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து விலகி ருதுராஜ் கெய்க்வாட்டை புதிய கேப்பனாக அறிவித்தார். அவரது தலைமையில் கடந்த ஆண்டு விளையாடியிருந்த சிஎஸ்கே அணியானது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத வேளையில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2025 தொடரிலும் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

இந்த ஆண்டு தோனி ஓய்வுபெறப்போவது உறுதி :

இதன் காரணமாக தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் பிளே ஆப் சுற்று வாய்ப்பை முதல் முறையாக இழந்த சிஎஸ்கே அணி பெரிய சரிவை சந்தித்துள்ளது. இந்த தொடரில் கேப்டன் ருதுராஜ் காரணமாக வெளியேறிய வேளையில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு தற்போது கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். ஆனால் தற்போது 43 வயதான அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்? என்பது உறுதியாக தெரியாது என்பதால் இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏற்கனவே இந்த ஆண்டின் மத்தியிலேயே தோனி ஓய்வை அறிவித்து விடுவார் என்று பேசப்பட்ட வேளையில் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறியதால் அவரால் அந்த முடிவை எடுக்க முடியாமல் போனது. இந்த ஆண்டு சிஎஸ்கே அணியை அவர் கேப்டனாக வழிநடத்தினாலும் நிச்சயம் இந்த ஐபிஎல் தொடர் முடிவு முடிந்த கையோடு அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவருடைய உடற்தகுதி முன்பு போல் பேட்டிங் செய்ய ஏதுவாக இல்லை என்பதை ஏற்கனவே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துவிட்டார். தோனி விக்கெட் கீப்பிங்கில் அசத்தலாக செயல்பட்டாலும் பேட்டிங்கின் போது கடைசி சில பந்துகளை மட்டுமே எதிர்கொள்ள முடிகிறது. அதிலும் அவரால் பெரியளவில் பங்களிக்க முடியாது என்று உறுதியாகிவிட்டது.

- Advertisement -

அதன் காரணமாகவே சென்னை அணியில் பல மாற்றங்கள் அதிரடியாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இளம் வீரர்களை சிஎஸ்கே அணி அதிகப்படியாக கொண்டு வந்துள்ளது. அதுமட்டும் இன்றி இதனால் வரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை பெரியளவில் தேர்வு செய்யாத சிஎஸ்கே அணி தற்போது வன்ஷ் பேடி, உர்வில் பட்டேல் என இளம் விக்கெட் கீப்பர்களை நோக்கி நகர்ந்து அவர்களை அணிக்குள் இணைத்துள்ளது.

இதையும் படிங்க : ரோஹித்துக்கு பதிலா நான் கேப்டனா இருக்கேன்.. பி.சி.சி.ஐ-யிடம் முறையிட்ட சீனியர் வீரர் – ஸ்ட்ரிக்ட்டாக மறுத்த நிர்வாகம்

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தோனி அடுத்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையில் இளம் அணியை ஒப்படைத்து விட்டு ஓய்வுபெற திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பல்வேறு இளைஞர்களுக்கு சென்னை அணியில் வாய்ப்பு தரப்பட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை மாற்று வீரராக அணிக்குள் கொண்டு வரவும் செய்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு தோனி ஓய்வு பெறப்போவது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -