- Advertisement -
ஐ.பி.எல்

சி.எஸ்.கே ரசிகர்களுக்காக வெளியான நற்செய்தி.. தோனி விளையாடப்போகும் போட்டி இதுதான் – விவரம் இதோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தற்போது 44 வயதை எட்டியுள்ள வேளையில் இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரே அவரது கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் சென்னை அணிக்கு வந்துள்ளதால் நிச்சயம் இந்த ஆண்டு தோனி ஓய்வை அறிவிப்பார் என்றும் அவரது இடத்தில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

தோனி விளையாடப்போகும் போட்டி குறித்து வெளியான தகவல் :

இதன் காரணமாக இந்த தொடரில் தோனி விளையாடும் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக தீவிர பயிற்சியை மேற்கொண்ட தோனி ஐ.பி.எல் தொடரானது ஆரம்பிக்கும் ஒரு நாள் முன்னதாக கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் இரண்டு வாரங்கள் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

அந்த வகையில் சி.எஸ்கே அணி தற்போது வரை விளையாடியுள்ள ஐந்து ஆட்டங்களில் அவர் இதுவரை விளையாடவில்லை. அதேபோன்று அடுத்ததாக சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தோனி எப்போது இந்த சீசனில் தனது முதல் போட்டியில் விளையாடுவார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர் மததியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இவ்வேளையில் சி.எஸ்.கே அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தோனி விளையாடப்போகும் முதல் போட்டி குறித்த ஒரு முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது தோனி கிட்டத்தட்ட முழு உடற்தகுதியை எட்டிவிட்டார் என்றும் அவர் எதிர்வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

இதையும் படிங்க : 3 – 4 நாட்களாக காய்ச்சல்.. இன்னும் 100 சதவீதம் பிட்டாகவில்லை.. தனது பிரச்சனை குறித்து – விவரட் கோலி வெளிப்படை

கடந்த ஆண்டு 2025 ஏப்ரல் 20-ஆம் தேதி இதே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தனது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடிய தோனி 6 பந்துகளில் 4 ரன்களை அடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அதே அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் இந்த ஆண்டு தனது முதல் போட்டியில் விளையாட இருக்கிறார். அப்படி தோனி அணிக்குள் வரும் பட்சத்தில் சஞ்சு சாம்சன் முழுநேர பேட்ஸ்மேனாக விளையாட வேண்டிய சூழலும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -