தோனியின் மொத்த சந்தோஷமும் இதனுல் தான் இருக்கிறது – பத்திரிகையாளர் பகிர்ந்த சுவாரசிய விடயம்

Dhoni
- Advertisement -

தோனி கிரிக்கெட்டைத் தவிர பல விஷயங்களில் திறமைக்காரர். இதை அவருடைய நண்பர்களும் அவருடன் ஆடிய வீரர்களும் கூறியதைக் கேட்டிருப்போம். அவர் ஒரு மிகப்பெரிய திறமைசாலி, அதனை தாண்டி நாய்களின் மீது அவருக்கு மிகப்பெரிய பிரியம் இருக்கிறது. மேலும் அவர் பைக்குகள் மீது மிகப் பெரிய பிரியம் வைத்திருக்கிறார்.

Dhoni 1

- Advertisement -

இதன் காரணமாக தனது வீட்டில் ஒரு மிகப்பெரிய கேரேஜ் அமைத்து 20க்கும் மேற்பட்ட பைக்குகளை பாதுகாத்து வருகிறார். சமீபத்தில்கூட விவசாயத்தில் களமிறங்கிய தோனி தானாகவே ஒரு ட்ராக்டர் வண்டியை ஓட்டிக் கொண்டு இருப்பதை பார்த்திருப்போம். தனது பண்ணை வீட்டில் கிட்டத்தட்ட ஐந்து நாய்களை வைத்து இருக்கிறார்.

இந்நிலையில்… நாய்கள் மீது அதிக அன்பு கொண்ட தோனி குறித்து ஒரு பத்திரிக்கையாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார். இதில் அவர் …

dhoni

ஒரு எட்டு வருடங்கள் இருக்கும். தோனியும் அவர்கள் மனைவி அவரது நண்பர் ஒருவரின் வீட்டிற்கு இரவு உணவிற்காக அழைக்கப்பட்டு இருந்தார்கள். நானும் அங்கு அழைக்கப்பட்டிருந்தேன். அங்குதான் தோனியை நான் முதன் முதலில் சந்தித்தேன். மிகவும் இயல்பாகவும் அன்பாக பேசினார்.

Dhoni 1

எப்போதும் தனது முகத்தில் சிரிப்பை வைத்திருந்தார். எங்களது உரையாடல்கள் ராணுவம், கிரிக்கெ,ட் பைக்குகள் என்று தொடர்ந்து கொண்டே சென்றது. இறுதியில் நாய்களுடன் முடிந்தது நான் எப்போதும் நாய்களுடன் இருக்கும்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அவைகளோடு இருக்கும்போது நேரம் போவதே தெரியாது என்று என்னிடம் கூறினார் தோனி இவ்வாறு தெரிவித்துள்ளார் அந்த பத்திரிகையாளர்.

Advertisement