தல போல வருமா.. 10 வருடத்துக்கு முன் விராட் கோலி மீதான அதே அன்பை ருதுராஜ் மீது காட்டிய தோனி

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் எட்டாம் தேதி நடைபெற்ற 22வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் சென்னை தங்களுடைய மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா சுமாராக விளையாடி 138 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34, சுனில் நரேன் 27 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ் பாண்டே தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் சேசிங் செய்த சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் கைக்வாட் 67*, டேரில் மிட்சேல் 25, சிவம் துபே 28 ரன்கள் எடுத்து 17.4 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதனால் வைபவ் அரோரா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் கொல்கத்தா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

தோனியின் அன்பு:
முன்னதாக இப்போட்டியில் கடைசி நேரத்தில் எம்எஸ் தோனி பேட்டிங் செய்ய வந்த போது சேப்பாக்கத்தில் இருந்த ரசிகர்கள் வெறித்தனமாக சத்தமிட்டு வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக களத்தில் இருந்த ஆண்ட்ரே ரசல் காதை பொத்திக் கொள்ளும் அளவுக்கு மெரினா வரை ஒலித்த சிஎஸ்கே ரசிகர்களின் வரவேற்பு மத்தியில் களமிறங்கிய தோனி வெற்றிக்கு 3 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட போது பவுண்டரி அடித்து ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் முதல் பந்தையே தடுத்த தோனி போராடி வெற்றியை கொண்டு வந்த ருதுராஜ் ஃபினிஷிங் செய்யட்டும் என்ற நோக்கத்துடன் அடுத்த ஓவரில் ஸ்ட்ரைக்கை கொடுத்தார். அதைத் தொடர்ந்து 18வது ஓவரின் முதல் பந்தில் சிங்கிள் எடுத்த ருதுராஜ் மீண்டும் தோனிக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். ஆனால் அப்போதும் பவுண்டரி அடிக்காத தோனி சிங்கிள் எடுத்து ருதுராஜூக்கே ஸ்ட்ரைக் கொடுத்தார்.

- Advertisement -

இறுதியாக அங்குல் ராய் வீசிய 4வது பந்தில் பவுண்டரி அடித்து ருதுராஜ் ஃபினிஷிங் செய்தார். அதைப் பார்த்த ரசிகர்களுக்கு 2014 டி20 உலகக் கோப்பை தான் நினைவுக்கு வந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் 10 வருடங்களுக்கு முன்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான செமி ஃபைனலில் விராட் கோலி போராடி வெற்றியை கொண்டு வந்தார்.

இதையும் படிங்க: அன்னைக்கும் தோனி கூட இருந்தாரு.. இப்போவும் கூட இருந்திருக்காரு.. வெற்றிக்கு பிறகு ருதுராஜ் சுட்டிக்காட்டிய சம்பவம்

இருப்பினும் கடைசியில் வந்த தோனி 7 பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது வெற்றியை கொண்டு வந்த விராட் கோலி ஃபினிஷிங் செய்யட்டும் என்ற நோக்கத்துடன் பந்தை தடுத்து நிறுத்தினார். அதன் பின் விராட் கோலி ஃபினிஷிங் செய்தது ரசிகர்களால் மறக்கவே முடியாது. அந்த வகையில் அன்று வருங்கால இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலியிட்ம் காட்டிய அன்பை இன்று புதிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜிடம் தல தோனி காண்பித்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement