MS Dhoni : இங்கிலாந்திலும் பயிற்சி போட்டியில் தோனிக்கு இவ்வளவு பெரிய வரவேற்பா – வீடியோ

இந்திய அணி நேற்று முன்தினம் நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டு

Dhoni
- Advertisement -

இந்திய அணி நேற்று முன்தினம் நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே குவித்தது. அதுவும் குறிப்பாக துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

Kohli

- Advertisement -

அதனைத் தொடர்ந்து வந்த கோலி 18 ரன்களும் ராகுல் 6 ரன்களும் தோனி 17 ரன்கள் எடுத்து ஏமாற்றினர். பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடினர். பிறகு 37 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்த பயிற்சி போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய அணி பல தொடர்களாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சி போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி வழக்கமாக செய்யும் கீப்பிங் வேலையை செய்யாமல் பீல்டிங் செய்தார். இதனைக் கண்ட இங்கிலாந்து நாட்டின் இந்திய ரசிகர்கள் டோனியை கண்டு தோனி தோனி என்று ஆரவாரம் செய்தனர். இதோ அந்த வீடியோ :

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தோனிக்கு இருக்கும் இந்த ரசிகர் பட்டாளம் கிரிக்கெட் வீரர்களையும் பிரபலங்களையும் வியக்க வைக்கும் அளவிற்கு இருந்தது. தோனிக்கு இங்கிலாந்தில் இவ்வளவு வரவேற்பு கிடைப்பது அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதனை காண்பிப்பது போல இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement