தோனி டேன்ஸ் ஆடி பாத்து இருக்கீங்களா ? மனைவி மற்றும் மகளுடன் நடனமாடிய நம்ம தல – வைரலாகும் வீடியோ

Dhoni
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஓய்வினை அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். ஆனால் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவேன் என்று அவர் கூறிய அந்த வார்த்தையே ரசிகர்களிடம் சற்று நிம்மதியை கொடுத்தது.

Sakshi

அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியை வழிநடத்திச் சென்ற டோனி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் லீக் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறுவதை சந்தித்தார். அதுதான் ரசிகர்கள் தோனியை லைவாக பார்த்த கடைசி தருணமாக இருந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் எப்போது தோனியை பார்ப்போம் என்று ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்காக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஐபிஎல் தொடர் முடிந்தும் சாக்ஷி பிறந்த நாள் வரை துபாயில் இருந்த அவர் கோட் சூட் அணிந்த படி தோனி மற்றும் மனைவி சாக்ஷி, மகள் ஸிவாவுடன் நடனமாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ன்னணியில் ஒலிக்கும் இசைக்கு ஏற்ப தோனி நடனம் ஆடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவு வைரலாகி வருகிறது. மேலும் தோனியின் ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்தும் வருகின்றனர். இந்த வீடியோ அனேகமாக சாக்ஷியின் பிறந்தநாளன்று எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement