42 வயதில் எதிரணிக்கு பயத்தை காட்டும் தல தோனி.. ரிஸ்வான், டிகே’வுக்கு முன்பாகவே 2 வரலாற்று சாதனை

MS Dhoni 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 31ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் சென்னையை 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் 51, டேவிட் வார்னர் 52, பிரிதிவி ஷா 47 ரன்கள் எடுத்த உதவியுடன் 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் அதை சேசிங் செய்த சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 1, ரச்சின் ரவீந்தரா 2, சமீர் ரிஸ்வி 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதன் காரணமாக ரகானே 45, டேரில் மிட்சேல் 34, சிவம் துபே 18, ஜடேஜா 21*, எம்எஸ் தோனி 37* ரன்கள் எடுத்து போராடியும் 20 ஓவரில் 171/6 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை தங்களுடைய முதல் தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

தோனியின் சாதனை:
முதல் வெற்றி கண்ட டெல்லி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார், 3 கலில் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக இந்த வருடம் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்து விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடி வரும் எம்.எஸ். தோனி முதலிரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்யாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் பேட்டிங் செய்ய வந்த தோனிக்கு 128 டெசிபல் சத்தம் பதிவாகும் அளவுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். அவர்களை ஏமாற்றாத தோனி முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து கொண்டாட வைத்தார். அத்துடன் வெற்றி கைநழுவினாலும் அன்றிச் நோர்ட்ஜேவுக்கு எதிரான 20வது ஓவரில் 4, 6, 0, 4, 0, 6 என 4 பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் மொத்தம் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 37* (16) ரன்களை 231.25 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார்.

- Advertisement -

அந்த வகையில் 42 வயதானாலும் ஸ்டைல் வராமல் இப்போதும் எதிரணிகளின் கண்ணில் பயத்தை காட்டும் தோனி இந்த 37 ரன்களையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக 5001* ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்கள் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 5001*
2. தினேஷ் கார்த்திக் : 4227
3. ராபின் உத்தப்பா : 3011
4. குவிண்டன் டீ காக் : 2812
5. ரிஷப் பண்ட் : 2737*

இதையும் படிங்க: 20 ஆவது ஓவரில் 20 ரன்கள் மட்டுமல்ல.. முதல் பந்திலேயே சம்பவம் நிகழ்த்திய தல தோனி – ரசிகர்கள் கொண்டாட்டம்

அத்துடன் சர்வதேசம், ஐபிஎல் உட்பட அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டையும் சேர்த்து தோனி இதுவரை 7036* ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்கள் அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் தோனி படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. குவிண்டன் டீ காக் : 8578
2. ஜோஸ் பட்லர் : 7721
3. எம்எஸ் தோனி : 7036*
4. முகமது ரிஸ்வான் : 7036
5. கம்ரான் அகமல் : 6962

Advertisement