நண்பர்களுடன் ‘பாத்ரூம்’ அரட்டை அடித்த தோனி..! அதிர்ச்சி செய்தி சொன்ன தோனி.! வீடியோ

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி தனது ஓய்வான நேரங்களை தனது மனைவி ஷாக்ஷி மற்றும் ஜிவாவுடன் தான் களித்து வருவார். தோனி எந்த அளவிற்குஅமைதியான பேர்வழியோ அந்த அளவிற்கு ஜாலியான பேர்வழியாக இருந்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் தனது நண்பர்களுடன் பாத்ரூமில் அரட்டை அடித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

dhoni

தோனி சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கு பெற்று விளையாடி வந்தார். தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. டெஸ்ட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றதால் தோனி இன்னும் ஒரு மாதம் விடுமுறையில் தான் இருப்பார்.

இதனால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வரும் தோனி சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேல் மகள், பூர்ணா பட்டேலின் திருமணதிற்கு சென்றுள்ளார். இந்த திருமணத்தில் பல்வேறு அரசியல் பிரபலங்களும், பாலிவுட் நடிகர்களும் பங்கேற்றனர். அதில் தோனியின் நண்பருமான பாலிவுட் பாடகர் ராகுல் வைத்யாவும் வந்திருந்தார்.

இந்த திருமணத்தின் போது ராகுல் வைத்யாவும், தோனியும் பாத்ரூமில் அரட்டை அடித்துள்ளனர். அந்த விடியோவை பாலிவுட் நடிகர் ராகுல் வைத்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீடியோவில் இருவரும் பாத் ரூமில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் கொண்டிருந்த போது:-

ராகுல் வைத்யா:– இவ்வளவு கூலாக யாரால் இருக்க முடியும்? உங்களால் மட்டும் தான் இருக்க முடியும்.

தோனி :- ஆனால்,என்னால் பாத்ரூமில் மட்டும் தான் இப்படி கூலாக இருக்க முடியும்.

கிரிக்கெட் போட்டிகளின் போது எப்போதும் பதட்டமடையாமல் இருப்பதால் தோனி ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கபட்டு வருகிறார். தோனியின் கூல் தன்மையை பற்றி பல்வேறு வீரர்களும் புகழ்ந்துள்ளனர். இந்நிலையில் ராகுல் கேட்ட இந்த கேள்விக்கு தோனி பதிலளித்த விதத்தை வைத்து பார்க்கும் போது தோனி கிரிக்கெட் போட்டிகளின் போது எப்போதும் கூலாக இருக்க முடியாது என்பதை தான் குறிப்பிட்டுள்ளாரோ என்று எண்ணம் தோன்றுகிறது.