தோனி தனது 40 ஆவது பிறந்தநாளை எங்கு எப்படி கொண்டாடினார் தெரியுமா ? – வைரலாகும் புகைப்படம்

Dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் டோனி 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடியதைத் தொடர்ந்து அதற்கு அடுத்து எப்போது விளையாடுவார் என்று அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து இருந்த வேளையில் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி திடீரென தனது ஓய்வு முடிவை வெளியிட்டு ரசிகர்களிடமிருந்து கண்ணீர் மல்க பிரியாவிடை பெற்றார்.

Dhoni

அதன் பின்னர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் இன்னும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்று வருகிறார். இந்நிலையில் தனது 40வது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய தோனிக்கு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தோனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் இவ்வேளையில் தோனி தனது 40வது பிறந்தநாளை எங்கு எப்படி கொண்டாடினார் ? என்பது குறித்து கேள்வி எல்லோர் இடத்திலும் நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போது அதனை வெளிப்படுத்தும் விதமாக டோனி பிறந்தநாள் கொண்டாடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதன்படி தற்போது ஐபிஎல் தொடர் இல்லாததால் ஓய்வு நேரத்தில் சிம்லாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தோனி.

தனது நண்பர்கள் அவர்களது மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் சுற்றுலா சென்று நேரத்தை கழித்து வருகிறார். அங்கேயே அவர்கள் தற்போது இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement