தோனி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா ? தோனி வெளியிட்ட புகைப்படம் – விவரம் இதோ

Dhoni-2

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோனி கடந்த இங்கிலாந்து உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். மேலும் தோனியின் ஒப்பந்த பட்டியல் இருந்து பிசிசிஐ இடம் இருந்து நீக்கப்பட்டது. இதனால் தற்போது இந்திய அணியில் அவரின் கேள்விக்குறியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

When u spot the tiger on ur own and he obliges u with just enough time to click a few pics.Visit to kanha was outstanding

A post shared by M S Dhoni (@mahi7781) on

அதனை தொடர்ந்து தோனியின் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் பல பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் தோனி எங்கு செல்கிறோம் அதுகுறித்த தகவல்களும் அடிக்கடி புகைப்படமாக வெளியாகி வருகின்றன. அதன்படி தற்போது தோனி மத்திய பிரதேச தேசிய பூங்காவில் உள்ள புலிகள் சரணாலயத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து குறிப்பிட்டதாவது நீங்களும் புலியை கண்டாலோ அல்லது நேரில் பார்த்தால் அது புகை படமாக எடுக்க நேரம் கிடைக்கும் என்று தோனி குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை தற்போது தோனி ரசிகர்கள் வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.