இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான தோனி பைக் மற்றும் கார் பிரியர் என்பது நாம் அறிந்ததே. மேலும் அவரது பண்ணை வீட்டில் பைக் மற்றும் கார்கள் என அனைத்தும் நிறுத்தி வைக்கவே அவர் தனியாக கேரேஜ் வைத்திருப்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் தற்போது அவரின் வீட்டிற்கு புதுவரவாக Mahindra Swaraj 963 FE என்ற டிராக்டர் ஒன்றை வாங்கியுள்ளார்.
மேலும் இந்த ட்ராக்டர் வாங்கியதற்கான காரணமும் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் தோனி ஐபிஎல் தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்று நினைத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக அவரது வருகை சற்று தாமதமாகி உள்ளது. மேலும் ஊரடங்கு நாட்களில் தனது மனைவி மற்றும் மகளுடன் ராஞ்சி பண்ணை வீட்டில் இருக்கிறார். அவர் குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் அவ்வப்போது அவரது மனைவி சாக்ஷி பகிர்ந்து வருகிறார்.
#Thala Dhoni meets Raja Sir in his newest beast! 😍 #HBDIlayaraja #WhistlePodu pic.twitter.com/dNQv0KnTdP
— Chennai Super Kings (@ChennaiIPL) June 2, 2020
அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது அவர் புதிதாக Mahindra Swaraj 963 FE டிராக்டர் வாங்கிய வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்டு உள்ளது. அந்த டிராக்டர் இந்திய மதிப்பில் சுமார் 8 லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தோனி இந்த டிராக்டர் வாங்க முக்கிய காரணம் யாதெனில் அவரது பண்ணை வீட்டில் உள்ள நிலத்தை அவர் சொந்தமாக உழுது இயற்கை விவசாயம் செய்யப்போவதாகும் அதற்காகவே இந்த டிராக்டர் வாங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.