ராஞ்சி மற்றும் மும்பையை தொடர்ந்து இந்தியாவில் தனது 3 ஆவது வீட்டினை வாங்கிய தோனி – எந்த ஊரில் தெரியுமா ?

Dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரை சேர்ந்தவர் தோனி. இப்பொழுது ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வரும் தல தோனி மிகப் பெரிய பரப்பளவு கொண்ட இந்த பண்ணை வீட்டில் தனது மனைவி மகளுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தோனி சமீபத்தில் தனது தேவைகளுக்கு ஏதுவாக மும்பையிலும் ஒரு வீடு ஒன்றினை வாங்கியிருந்தார்.

ziva

மேலும் அந்த மும்பை வீட்டிலிருந்து ஷாக்ஷி தோனியும் சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது இவர்கள் மூன்றாவதாக ஒரு வீட்டினை மும்பைக்கு அருகில் உள்ள புனே நகரத்தில் வாங்கியுள்ளனர். அவர்கள் வாங்கியுள்ள இந்த புதிய வீடு பிம்ப்ரி-சின்ச்வாட் என்னும் இடத்தில் வாங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கடல் மட்டத்திலிருந்து 590 மீட்டர் உயரமுடைய இந்த பகுதியானது. 15 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது என்றும் இந்த பகுதியில் அதிக தொழிற்சாலைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் தான் தற்போது தோனியும் தனது புதிய வீட்டை வாங்கியுள்ளார். ராஞ்சி பண்ணை வீட்டில் அதிகமாக விலங்கினங்களை பராமரித்து வரும் தோனி நாய்கள் மட்டுமின்றி சமீபத்தில் சீட்டா என்ற குதிரையையும் வாங்கி வளர்த்து வருகிறார்.

dhoni house

அதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தற்போது ஓய்விலிருக்கும் தோனி மீண்டும் இந்த வருட செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement