மனசுல பெரிய தோனின்னு நினைப்பா ? தோனி மாதிரி பண்றேன்னு திட்டுவாங்கிய விக்கெட் கீப்பர் – வைரலாகும் வீடியோ

MP

இந்தியாவில் தற்போது சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இன்றைய ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் மத்தியபிரதேச அணியும், மேகாலயா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மத்தியபிரதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 244 ரன்கள் என்ற இமாலய ரன்களை குவித்தது.

இந்த போட்டியில் மத்தியபிரதேச அணி பேட்டிங் செய்யும் பொழுது மேகாலய அணியின் விக்கெட் கீப்பர் செய்த செயல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி மத்திய பிரதேச அணியின் வீரரான அய்யர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது பந்தினை தடுத்துவிட்டு ஒருரன் ஓட நினைத்தார். ஆனால் பந்து நேராக பீல்டரின் கைகளுக்கு செல்ல பந்தை பிடித்த பீல்டர் விக்கெட் கீப்பரிடம் அடித்தார்.

இதனால் பாதி தூரம் ஓடிய பேட்ஸ்மேன் தான் அவுட் தான் என்று பொறுமையாக திரும்பி வந்தார். ஆனால் விக்கெட் கீப்பர் அந்த பந்தை சரியாக பிடித்து ஸ்டம்பில் அடித்திருந்தாலே ஈஸியாக ரன்அவுட் செய்து இருக்கலாம். அதைவிட்டுட்டு தோனியை போன்று பின்நின்று ஸ்டம்பை பார்க்காமலேயே அடிக்கிறேன் என்று பந்தை ஸ்டம்பில் அடிக்க தவறினார்.

மேலும் பந்துக்கும், ஸ்டம்புக்கும் சம்பந்தமே இல்லாமல் பந்து சென்றது. எளிதாக செய்யவேண்டிய ரன்அவுட்டை கோட்டைவிட்டதற்காக சக வீரர்களிடமும் அவர் திட்டு வாங்கினார். அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.