மவுன்ட் மாங்கனி மைதானத்தின் விசித்திரம் என்ன தெரியுமா ? ஜெயிக்கணுனா இது அவசியம் – மைதான கண்ணோட்டம் இதோ

Ground
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 ஆவது டி20 போட்டி இன்று மவுண்ட் மாங்கனியில் நடைபெற உள்ளது.

IndvsNz

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த போட்டி நடைபெற உள்ள மவுண்ட் மாங்கனி மைதானம் குறித்த ஒரு சிறப்பான தகவலை இந்த பதிவில் பார்ப்போம். அதன்படி இதுவரை இந்த மைதானத்தில் 9 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 7 (ஏழு) முறை முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை மட்டுமே முதலில் பவுலிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மைதானத்தில் குறைந்த பட்ச முதல் இன்னிங்ஸ் விளையாடும் அணி 173 ரன்களையும், அதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும் அணி 142 ரன்களும் சராசரியாக அடித்துள்ளது. மேலும் இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் பொழுது 183 ரன்கள் வரை எளிதாக அடிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த மைதானத்தில் அதிகபட்சமாக நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது 243 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே பேட்டிங்க்கு சாதகமான இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெறும் என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

Advertisement