உலகின் மிகப்பெரிய மைதானமான மோட்டிரா மைதானத்தின் பெயர் மாற்றம் – என்ன தெரியுமா ?

Motera-1 cricket Stadium ground
- Advertisement -

உலகின் மிகப் பெரிய மைதானம் என்று பெயர் பெற்றுள்ள குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள “மோட்டீரா” மைதானம் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி துவங்கும் முன்னர் அதன் பெயர் மாற்றப்பட்டது. புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம் உலக அளவில் மிகப் பெரிய மைதானமாக அகமதாபாத்தில் நிறுவப்பட்டுள்ளது.

motera

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் இங்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 63 ஏக்கர் பரப்பளவில் விரிந்து உள்ள இந்த அரங்கத்தில் ஒரே நேரத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் போட்டியை கண்டு ரசிக்கலாம். 800 கோடி ரூபாய் செலவில் எல் அண்ட் டி நிறுவனம் இந்த மைதானத்தை வடிவமைத்துள்ளது.

- Advertisement -

இந்த அரங்கத்தை தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு உள்ள பிசிசிஐ அடுத்தடுத்து சில போட்டிகளை அங்கு நடைபெற வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த மைதானத்தை திறந்து வைத்தார்.

மேலும் இந்த மைதானத்தின் பழைய பெயரான சர்தார் பட்டேல் என்ற பெயர் மோட்டீரா என்று மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பெயரை மாற்றி தற்போது நரேந்திர மோடி ஸ்டேடியம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Modi

மேலும் பிட்சின் இரு முனைகளுக்கும் ரிலையன்ஸ் எண்ட் மற்றும் அதானி எண்ட் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயரை தொலைக்காட்சியில் கண்ட ரசிகர்கள் தற்போது தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளம் மூலமாக கருத்துகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement