டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் சேர்ந்து விளையாடியும் ஒன்றாக பேட்டிங் செய்யாத டாப் 5 ஜோடிகள்

Muttiah Muraltharan Sanath jayasuriya
- Advertisement -

கிரிக்கெட் என்பது 11 பேர் கொண்ட அணி விளையாட்டு என்பதால் அதில் வெற்றி பெறுவதற்காக அனைத்து வீரர்களும் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது போல் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் 4 – 5க்கும் மேற்பட்ட வீரர்கள் இணைந்து சிறப்பாக செயல்பட்டால் தான் தங்களது நாட்டுக்காக வெற்றியைப் பெற்றுத்தர முடியும். எப்போதாவது அரிதான போட்டிகளில் மட்டுமே தனி ஒருவனாக ஒரு வீரர் வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதை பார்க்க முடியும். இருப்பினும் பேட்டிங் துறையில் அடிப்படை விதி முறைப்படி 2 வீரர்கள் ஜோடியாக இருந்தால் மட்டுமே பேட்டிங் செய்து ரன்களை குவிக்க முடியும்.

அந்த நிலைமையால் ஒரு அணிக்காக நீண்டகாலம் விளையாடும் வீரர்கள் ஏதோ ஒரு தருணத்தில் இணைந்து பேட்டிங் செய்ய வேண்டிய நிலைமை கட்டாயம் ஏற்படும். ஏனெனில் அனைத்து போட்டிகளிலும் விக்கெட்டுக்கள் என்பது ஒரே மாதிரியாக விழாது. அதாவது டாப் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் ஏதோ ஒரு மிடில் ஆர்டர் அல்லது லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கும் பேட்ஸ்மேன்களுடன் இணைந்து விளையாட வேண்டிய நிலைமை கண்டிப்பாக ஏற்படும்.

- Advertisement -

அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கும் வீரர் ஒருபுறம் நங்கூரமாக நின்றாலும் எதிர்ப்புறம் வரும் பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி சென்றால் அவர்கள் அனைவருடன் பேட்டிங் செய்து 11-வதாக களமிறங்கும் வீரருடன் இணைந்து பேட்டிங் செய்த நிறைய போட்டிகளை பார்த்துள்ளோம். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நிறைய போட்டிகளில் விளையாடிய போதிலும் ஒரு முறை கூட இணைந்து பேட்டிங் செய்யாத டாப் 5 ஜோடிகளைப் பற்றி பார்ப்போம்:

5. மைக்கேல் ஸ்லேட்டார் – கிளன் மெக்ராத் 57: ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர்களில் வேகப்பந்து வீச்சாளரான கிளன் மெக்ராத் பெரும்பாலும் 10, 11 போன்ற இடங்களில்தான் பேட்டிங் செய்ய வருவார்.

- Advertisement -

அதேசமயம் டாப் மற்றும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய கூடிய மைக்கேல் ஸ்லேட்டருடன் கிளன் மெக்ராத் 57 போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளார். ஆனால் இவர்கள் இருவரும் ஒரு முறை கூட இணைந்து ஆஸ்திரேலியாவுக்கு பேட்டிங் செய்ததே கிடையாது.

4. ரோஹன் கண்காய் – லன்ஸ் கிப்ஸ் 58: 1970களில் உலகையே மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தரமான பேட்ஸ்மேனாக வலம் வந்த ரோகன் காண்காய் அந்த அணிக்காக 6227 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

அதேபோல் 309 விக்கெட்டுகள் எடுத்த ஜாம்பவான் லன்ஸ் கிப்ஸ் பெரும்பாலும் 9, 10, 11 போன்ற இடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்குவார். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 58 போட்டிகளில் ஒன்றாக சேர்ந்து விளையாடிய இவர்கள் ஒரு முறை கூட சேர்ந்து பேட்டிங் செய்ததே கிடையாது.

3. அலஸ்டர் குக் – கிரேம் ஸ்வான் 60: 2010 வாக்கில் கேப்டனாக நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அலஸ்டேர் குக் 10000 ரன்களை குவித்த முதல் இங்கிலாந்து பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அவரது தலைமையில் சுழல் பந்து வீச்சாளராக நீண்டகாலம் விளையாடிய கிரேம் ஸ்வான் தனது மிகச்சிறந்த சுழல் பந்து வீச்சால் நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் 60 டெஸ்ட் போட்டிகளில் சேர்ந்து விளையாடிய இவர்கள் ஒரு முறை கூட சேர்ந்து பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறவில்லை.

2. ஹெர்சல் கிப்ஸ் – மகாயா நிட்டினி 64: 90களின் இறுதியில் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்த தென் ஆப்பிரிக்காவின் ஹெர்சல் கிப்ஸ் பெரும்பாலும் ஓபனிங் போன்ற டாப் ஆர்டரில் விளையாடுவார்.

அவரைப்போல தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சில் அந்த சமயத்தில் அட்டகாசமாக செயல்பட்டு ரசிகர்களிடம் புகழ்பெற்ற மகாயான நிடனி பெரும்பாலும் கடைசி நேரத்தில் களமிறங்குவார். அந்த வகையில் 64 போட்டிகளில் இணைந்து விளையாடிய இவர்கள் ஒரு முறை கூட இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்ததே இல்லை.

1. சனாத் ஜெயசூர்யா – முத்தையா முரளிதரன் 90: 90களின் இறுதியில் துவங்கி 2010 வரை இலங்கையின் மகத்தான 2 சாம்பியன் வீரர்களாக வலம் வந்த இவர்களில் ஜெயசூர்யா பெரும்பாலும் தொடக்க வீரராக களமிறங்கி எதிரணிகளை வெளுத்து வாங்குவார்.

அதேபோல் தனது மாயாஜால சூழலால் சச்சின் டெண்டுல்கர் உட்பட அனைத்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களையும் திணறடித்த முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை எடுத்து காலத்தை கடந்து நிற்கும் மெகா உலக சாதனை படைத்தார். மொத்தம் 90 போட்டிகளில் இலங்கைக்காக இணைந்து விளையாடிய இவர்கள் ஒரு முறை கூட பார்ட்னர்ஷிப் போடும் வாய்ப்பு கிடைக்காமலேயே கடைசி வரை ஓய்வு பெற்றது ஆச்சரியமாகும்.

Advertisement