சாதனைக்கு மேல் சாதனை..! பிரமாதமான இன்னிங்ஸ்..! கோலி வெறியாட்டம்

ஆகஸ்ட் 18ஆம் தேதி நேற்று தொடங்கிய இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். பல சாதனைகளை தன் வசம் வைத்திருக்கும் கோலி, நேற்று மற்றொரு சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று நினைத்த கோலி நேற்றைய போட்டியில் விளையாடினர்.

ko 2

நேற்றைய முதல் இன்னிங்சில் கோலி 97 ரன்களை குவித்து வெளியேறினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் கோலி, அடில் ரஷீத் பந்தில் ஸ்டோக்ஸ்யிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நேற்று அடித்த 97 ரன்களையும் சேர்த்து கோழி மொத்தமா “1731 ரன்கள்” அயல் நாட்டு மண்ணில், இந்திய அணி கேப்டனாக அடித்துள்ளார்.

இவர் அடித்த இந்த 1731 ரன்களே அயல் நாட்டு மண்ணில், இந்திய அணி கேப்டன் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன் எண்ணிக்கை ஆகும். 3வது டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா? மாட்டாரா? என்று நினைத்த நிலையில், இந்த இக்கட்டான சூழலில் மேலும் ஒரு முக்கியமான இன்னிங்க்ஸை அவர் விளையாடி உள்ளார். இவர் தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதற்கு உதாரணமாக அவரது நேற்றைய இன்னிங்ஸ் சிறப்பாக இருந்தது என்றே கூற வேண்டும்.

ko 1

உலகின் எந்த ஒரு இடத்திலும் கோலியல் ரன் குவிக்க முடியும் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்ததே. கோழியின் நேற்றைய இன்னிங்ஸ் பற்றி பல முன்னாள் வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.