இந்தியாவுக்கு சமமா பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்.. எங்களுக்கும் அந்த ஆசையில்ல.. தலைவர் நக்வி பேட்டி

Moshin Naqvi
- Advertisement -

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் எல்லைப் பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் விளையாடுவதை நிறுத்தி வைத்துள்ளது. அதே சமயம் ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பை தொடர்களில் பொதுவான இடத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. அந்த சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள்.

அதற்கு இந்திய அரசாங்கம் ராணுவ நடவடிக்கைகள் எடுத்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது. அதன் எதிரொலியாக இந்திய அணியினர் 2025 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுடன் கைகுலுக்காமல் விளையாடியது சர்ச்சையை உண்டாக்கியது. மேலும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் தலைவர் மோசின் நக்வி கைகளால் கோப்பையை வாங்க முடியாது என்றும் இந்திய அணி தெரிவித்து விட்டது.

- Advertisement -

இந்தியாவுக்கு சமமான பதிலடி:

மறுபுறம் ஆசிய கவுன்சில் தலைவராகவும் இருக்கும் அவர் வேறு நபரிடம் கொடுத்து கோப்பையைக் கொடுக்காமல் கையோடு எடுத்துச் சென்று விட்டார். அதன் எதிரொலியாக சமீபத்தில் நடைபெற்ற 2025 அண்டர்-19 ஆசியக் கோப்பையிலும் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி கைகுலுக்கவில்லை. இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் கோப்பையை வென்று அசத்தியது.

ஆனால் அப்போட்டியில் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் பாகிஸ்தான் பவுலர் அலி ராசா இந்திய வீரர்களிடம் வம்பிழுக்கும் வகையில் சில வார்த்தைகளை பேசி வெறித்தனமாக கொண்டாடினார். அதற்கு இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே ஹிந்தி கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியும், வைபவ் சூரியன்சி காலணியைக் காண்பித்தும் அவருக்கு பதிலடி கொடுத்தார்கள். அதனால் இந்திய அணிக்கு நடத்தயில்லை என்று சொல்லி பாகிஸ்தான் பயிற்சியாளர் சர்பராஸ் கான் விமர்சித்தார்.

- Advertisement -

தலைவர் உறுதி:

இந்நிலையில் இந்திய அணிக்கு சமமாக பாகிஸ்தான் பதிலடி கொடுத்து வருவதாக மோசின் நக்வி தெரிவித்துள்ளார். அதனால் இந்திய அணியுடன் கைகுலுக்கும் ஆசை தங்களுக்கும் இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எங்களுடைய நம்பிக்கை இன்றும் அப்படியே இருக்கிறது. விளையாட்டுக்குள் நாம் அரசியலைக் கொண்டு வரக்கூடாது என்று எங்களுடைய பிரதமர் என்னிடம் 2 முறை சொன்னார்”

இதையும் படிங்க: 412 ரன்ஸ்.. தனித்துவ உலக சாதனை போட்டியில் போராடிய.. இலங்கையை வீழ்த்திய இந்திய மகளிரணி

“அதனால் முதல் நாளிலிருந்தே நாங்கள் அரசியல் தனியாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம். ஆனால் அன்றைய நாளில் (இந்தியா) எம்மாதிரியான அணுகுமுறையைக் காண்பித்தார்கள் என்பதை சர்பராஸ் உங்களுக்கு சொல்லியிருப்பார். ஒருவேளை இந்தியா கைகுலுக்க விரும்பவில்லை என்றால் நாங்களும் அவர்களுடன் கைகுலுக்கும் ஆசையைக் கொண்டிருக்கவில்லை. என்ன நடந்தாலும் நாங்கள் இந்தியாவுடன் சமமாக காலடி வைப்போம். அந்த அணுகுமுறை தொடர்வதை நீங்கள் பார்ப்பீர்கள். அவர்கள் ஒரு செயலை செய்து விட்டு நாம் பின்வாங்குவது சாத்தியமில்லை. அது நடக்காது” என்று கூறினார்.

Advertisement