- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாபர் அசாமுடன் ஒப்பிடும் போது விராட் கோலி ஜீரோ.. மோசின் கான் போகுற போக்கில் உருட்டல் பேட்டி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானில் நடைபெறும் அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் நடப்புச் சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலேயே நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்தது. பின்னர் துபாயில் இந்தியாவுக்கு எதிராக போராடாமல் தோற்ற பாகிஸ்தான் 5 நாட்களில் லீக் சுற்றுடன் வெளியேறியது.

இறுதியில் வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாத அணி என்ற மோசமான உலக சாதனையை பாகிஸ்தான் சமன் செய்தது. அந்தத் தோல்விக்கு பேட்டிங் துறையின் நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரானப் போட்டியில் மிகவும் மெதுவாக விளையாடிய அவர் தோல்விக்கு காரணமானார்.

- Advertisement -

கோலி ஜீரோ:

மேலும் பரம எதிரி இந்தியாவுக்கு எதிரானப் போட்டியிலும் 23 ரன்கள் மட்டுமே எடுத்த பாபர் அசாம் தொடர்ந்து சொதப்பலாகவே செயல்பட்டு வருகிறார். அதனால் ஏமாற்றமடைந்த சோயப் அக்தர், முகமது ஹபீஸ் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் விராட் கோலி மட்டும் தான் உண்மையான கிங் என்று பாராட்டினர். ஆனால் பாபர் அசாம் ஃபிராடு என்று அக்தர் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் பாபர் அசாமுடன் ஒப்பிடும் போது விராட் கோலி வெறும் ஜீரோ என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் மற்றும் பயிற்சியாளர் மோசின் கான் உருட்டலான கருத்தைத் தெரிவித்துள்ளார். இது பற்றி ஏஆர்ஒய் நியூஸ் எனும் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் உங்களுக்கு நான் ஒரு விஷயத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்”

- Advertisement -

பாதாளத்தில் பாகிஸ்தான்:

“பாபர் அசாமுடன் ஒப்பிடும் போது விராட் கோலி ஒன்றுமே இல்லை. கோலி ஜீரோ. இங்கே நாம் யார் சிறந்த வீரர் என்பதைப் பற்றி பேசவில்லை. நாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை பற்றி பேசுகிறோம். அது தற்போது அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் எந்த திட்டமும், தகுதியும், பொறுப்புக் கூறவில்லை” என்று போகிறப் போக்கில் பேசினார்.

இதையும் படிங்க: உலகின் எந்தவொரு வீரரும் செய்யாத இமாலய சாதனையை நிகழ்த்தி அசத்திய விராட் கோலி – விவரம் இதோ

ஏனெனில் இதே பாகிஸ்தானை பந்தாடிய விராட் கோலி தன்னுடைய 82வது சதத்தை அடித்து சாதனைப் படைத்தார். மேலும் சச்சின் டெண்டுல்கரை முந்திய அவர் வேகமாக 14000 ஒருநாள் ரன்கள் அடித்த வீரராகவும் உலக சாதனை படைத்தார். மறுபுறம் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக மட்டுமே பாபர் அடிப்பார் என்று மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா சமீபத்தில் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -