
வங்கதேச கிரிக்கெட் அணியில் ஒருநாள் கேப்டனாக இருக்கும் மற்ற மோர்ட்டாசா தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் . வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருப்பவர் மோர்ட்டாசா. இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
இவரது தலைமையிலான வங்கதேச அணி பல வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. இவரது தலைமையிலான 87 போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேச அணி 49 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மீபகாலமாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கும் இவருக்கும் இடையில் முட்டாள் மோதல் இருந்து வந்தது. குறிப்பாக உலக கோப்பை தொடரில் இவரால் ஒரு கேப்டனாக பெரிதாக சாதிக்க முடியவில்லை என்பதால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இவர் மீது அழுத்தத்தை கொடுத்து வந்தது.
தற்போது ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வங்கதேச அணியின் கேப்டன் மோர்தசா மூன்றாவது போட்டியில் இருந்து தனது கேப்டன் பதவியை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
இதனால் வங்கதேச அணி அணியின் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அவரது தலைமையின் கீழ் வங்கதேச அணி பல சிறப்பான வெற்றிகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி அந்த அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் பல இளம் வீரர்களை உருவாக்கி அந்த அணிக்கு வலிமை சேர்ந்ததே அவர்தான் என்றும் கூறலாம்.