இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அந்த தொடரின் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியிருந்தார். ஆனால் அந்த தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்ஸ்சில் காயம் அடைந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது பந்துவீச வரவில்லை. அதனை தொடர்ந்து தனது காயத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் ஐபிஎல் தொடரின் போது தான் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியிருந்தார்.
பும்ராவை பாத்து மிரண்டு போயிட்டேன் : மோர்னே மோர்கல்
இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள பும்ரா அங்கு நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்படுகிறது. பணிச்சுமை காரணமாக 2 போட்டிகளில் ஓய்வு எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடருக்கான பயிற்சியில் பும்ரா ஈடுபட்டு வரும் விதத்தை பார்த்து தான் வியந்து போயுள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
பும்ராவிற்கு ஒரு தொடருக்காக எப்படி தயாராக வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். அந்த வகையில் இந்த இங்கிலாந்து தொடருக்காக அவர் தற்போது தன்னை தயார்படுத்தி வருகிறார். கடந்த மூன்று நாட்களாகவே அவர் வலைப்பயிற்சியில் பந்துவீசும் ஆற்றலை பார்த்து மிரண்டு போய்விட்டேன். ஏனெனில் காயத்திற்கு பிறகு ஒரு பந்துவீச்சாளரால் எப்படி முழு உத்வேகத்துடன் பந்துவீச முடிகிறது என்பது எனக்கு தெரியவில்லை.
தற்போது உடலளவிலும், மனதளவிலும் மிகச் சிறப்பாக முன்னேறியுள்ளார். அற்புதமான பார்மில் இருக்கிறார். எனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் முக்கிய பந்துவீச்சாளராக பும்ரா இருப்பார் என்று நினைக்கிறேன். பும்ராவை பொருத்தவரை கடந்த மூன்று நாட்களாக மிகச்சிறப்பாக பந்துவீசி வருகிறார். எனவே இந்த தொடரிலும் அவர் பிரமாதமான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என மோர்னே மோர்கல் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பும்ராவின் ரெக்கார்டை காலி செய்த காகிஸோ ரபாடா – விவரம் இதோ
இந்த தொடரில் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற மிகச் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இந்த தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு நிச்சயம் பிரமாதமாக இருக்கும் என்று நம்பலாம்.



