அவங்க எவ்ளோ தான் போராடுவாங்க.. இதான் இந்தியாவின் சரிவுக்கு காரணம்.. இப்போவும் ஜெயிப்போம்.. மோர்கல்

Morne Morkel
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 36 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோற்ற இந்தியா இரண்டாவது போட்டியிலும் தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. அக்டோபர் 24ஆம் தேதி புனேவில் துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 259 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்தியா மோசமாக பேட்டிங் செய்து 156க்கு ஆல் அவுட்டானது.

அதன் பின் 103 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 198-5 ரன்கள் எடுத்துள்ளது. அதனால் 301 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நியூஸிலாந்து இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. மறுபுறம் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் ஒரு தொடரில் தோற்கும் அவமானத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தியாவின் தவறு:

இந்நிலையில் என்ன தான் பவுலர்கள் போராடினாலும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லையெனில் வெற்றி பெற முடியாது என இந்திய அணியின் துணை பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். மேலும் தவறிலிருந்து திருந்தி இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா பெரிய ரன்கள் குவித்து வெல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு இடையே நான் எப்போதும் ஒப்பிட்டு பேசுவதில்லை. ஆனால் டெஸ்ட் போட்டியில் வெல்வதற்கு நீங்கள் முதல் இன்னிங்ஸில் ரன்கள் அடிக்க வேண்டும். அதை எங்களால் செய்ய முடியவில்லை. எங்களுடைய பேட்டிங் வரிசையில் உலகத்தரமான வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு அதை செய்வதற்கான செயல்முறைகள் தெரியும். அந்த தவறுகளை நாங்கள் திருத்திக் கொள்வோம் என்று நம்புகிறோம்”

- Advertisement -

மோர்கெல் நம்பிக்கை:

“ஏனெனில் தற்சமயத்தில் அது எங்களுக்கு பெரிய சோதனையை கொடுத்துள்ளது. இந்திய அணியில் இந்த தவறை திருத்திக் கொள்வதற்கு தேவையான நிறைய அனுபவம் இருக்கிறது. எனவே இரண்டாவது இன்னிங்ஸில் வலுவாக அவர்கள் மீண்டும் வருவார்கள் என்று நான் ஆதரவளிப்பேன். இந்த சூழ்நிலையை சமாளித்து எப்படி அவர்கள் கம்பேக் கொடுக்கிறார்கள் என்பதைப் பார்க்க நான் ஆவலுடன் உள்ளேன்”

இதையும் படிங்க: 7 வருஷமா பேசிக்கல.. ரசிகனா நீ தேவையில்லன்னு திட்டிய சேவாக் வாட்ஸப்ல டெலிட் பண்ணிட்டாரு.. மேக்ஸ்வெல் பேட்டி

“நாங்கள் நம்புகிறோம். இது வேடிக்கையான விளையாட்டு. அட்டாக் செய்யக்கூடிய எங்களுடைய வீரர்களுக்கு இந்த சூழ்நிலையில் நன்றாக தெரியும். அது உண்மையில் மிகவும் கடினம். ஆனால் ஏதேனும் ஒரு வீரர் உத்வேகத்தை எடுத்துக்கொண்டு சண்டையிட்டு டாப் செயல்பாட்டை வெளிப்படுத்துவதற்கு இது அற்புதமான வாய்ப்பு” என்று கூறினார். மொத்தத்தில் இப்போட்டியில் இந்தியா பெரிய இலக்கை சவாலான பிட்ச்சில் சேசிங் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement