- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3 முறை டக் அவுட்டானாலும் பரவாயில்ல.. அபிஷேக் சர்மாவுக்கு தான் வாய்ப்பு.. காரணத்தை கூறிய – மோர்னே மோர்கல்

இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அமெரிக்க அணிக்கு எதிரான முதலாவது லீக் போட்டியில் தன் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் நமீபியா அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியை உடல் நலக்குறைவு காரணமாக தவறவிட்டார்.

அபிஷேக் சர்மா தான் எங்களோட ஓப்பனர் : மோர்னே மோர்கல்

மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது லீக் போட்டியின் போது கம்பேக் கொடுத்த அவர் அப்போதும் நான்கு பந்துகளை சந்தித்த நிலையில் மீண்டும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தார். பின்னர் லீக் சுற்று ஆட்டத்தின் கடைசி போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக மீண்டும் பார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த போட்டியிலும் 3 பந்துகளை சந்தித்து விளையாடி டக் அவுட்டானார்.

- Advertisement -

இப்படி மூன்று போட்டிகளிலும் டக் அவுட்டாகிய அவர் இன்னும் தன்னுடைய ரன் குவிப்பை இந்த டி20 உலககோப்பை தொடரில் துவங்காமல் இருக்கிறார். இதன் காரணமாக எதிர்வரும் சூப்பர் 8 சுற்றுக்கான தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக இந்திய அணியின் துவக்க வீரராக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

ஆனால் எதிர்வரும் இந்த சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க வீரராக தொடர்ந்து அபிஷேக் சர்மா தான் நீடிப்பார் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : அபிஷேக் சர்மா குறித்து எந்த ஒரு விவாதமும் அணிக்குள் ஏற்படவில்லை. அவர் நிச்சயம் மீண்டும் ரன் குவித்து ரசிகர்களையும், அணியையும் மகிழ்விப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்தி பணிச்சுமை அழுத்தத்தில் இருக்கிறாரா? பவுலிங் கோச் – மோர்னே மோர்கல் பதில்

வலைப்பயிற்சியில் சிறப்பாக விளையாடும் அவர் தனது பார்மை மீட்டெடுப்பார் என்று நிர்வாகம் உறுதியாக நம்புவதாக மோர்னே மோர்கல் கூறியுள்ளார். இதன் மூலம் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காது என்பதும் அபிஷேக் சர்மாவே தொடர்ந்து இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடுவார் என்பதும் உறுதியாகியுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இந்த சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியானது பிப்ரவரி 22-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -