- Advertisement -
உலக கிரிக்கெட்

Eoin Morgan : இந்திய அணிக்கு எதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இதுவே காரணம் – மோர்கன்

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 337 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக பேர்ஸ்டோ 111 ரன்களை குவித்தார். பென் ஸ்டோக்ஸ் 79 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பிறகு 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 102 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை இந்திய அணிக்கு இந்த தொடரின் முதல் தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கூறியதாவது : இந்த போட்டியின் தொடக்கம் மிகச்சரியாக இருந்தது. டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது அவ்வளவு எளிதான முடிவு கிடையாது. ஆனால் நாங்கள் இன்றைய போட்டியின் காலையிலேயே முதலில் பேட்டிங் செய்வது என்று உறுதியாக இருந்தோம். அதன்படி நன்றாக விளையாடினோம்.

ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியவர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றது. மேலும் பவுலிங்கில் எங்களது அணி வீரர்கள் மைதானத்தின் தன்மையை பயன்படுத்தி அதிகமாக ஸ்லோவான பந்துகளை உபயோகித்தனர். மேலும், இந்திய அணி சேசிங் செய்யும்போது போட்டி இழக்க நேரிடுமோ என்ற பயம் எனக்கு சுத்தமாக இல்லை இதுவே வெற்றி காரணமாகவும் நான் கருதுகிறேன் என்று மோர்கன் கூறினார்.

- Advertisement -
Published by