5 ஆவது டி20 போட்டி : நாங்கள் செய்த இந்த தவறுதான் எங்களின் தோல்விக்கு காரணம் – மோர்கன் வருத்தம்

Morgan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 52 பந்துகளில் 80 ரன்களையும், தொடக்க வீரர் ரோகித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தனர்.

INDvsENG

- Advertisement -

இதனால் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்று தொடரை மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் கைப்பற்றியது. உலகின் நம்பர் 1 டி20 அணியான இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில் : இந்தியா போன்ற பலமான அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் விளையாடிய இந்த தொடர் அற்புதமான ஒன்று. இன்றைய போட்டியும் இரு அணிக்கும் சிறப்பாக அமைந்தது. இந்திய அணி இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடியது, அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள் தான்.

thakur

இந்த தொடர் முழுவதுமே நாங்கள் நல்ல ஒரு கிரிக்கெட்டை விளையாடினோம். இதிலிருந்து பல பாசிட்டிவ்வான விஷயங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. எங்கள் அணியின் பேட்டிங் ஆர்டர் சற்று ஆழமாகவே இருக்கிறது. அதனை நாங்கள் சரியான முறையில் எடுத்து முறைப்படுத்தி இருக்க வேண்டும். போட்டியின் முக்கியமான இந்த கட்டத்தில் நாங்கள் மிடில் ஆர்டரில் சரியாக விளையாடவில்லை. துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்து கொடுத்தும் மிடில் ஆர்டரில் ஏற்பட்ட இந்த சறுக்கல் தான் தோல்விக்கு காரணம்.

Thakur

எப்போதும் எங்கள் ஓய்வு அறையில் பல திறமைசாலிகள் இருக்கின்றனர். இன்று எங்களுக்கான நாள் இல்லை என்று நினைக்கிறேன். வரும் போட்டிகளில் நாங்கள் நிச்சயம் ஆதிக்கம் செலுத்துவோம் என்றும் இந்த தொடரில் இருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொண்டதாகவும் மோர்கன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement