INDvsENG : ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் – அடப்பாவமே இது வேறயா ?

INDvsENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து அடுத்ததாக தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் உலகின் நம்பர் ஒன் அணியை வீழ்த்திய இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

INDvsENG

அடுத்ததாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இழந்ததால் ஒருநாள் தொடரை கைப்பற்ற இங்கிலாந்து அணி மும்முரம் காட்டும். அதே வேளையில் டெஸ்ட் மற்றும் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி இங்கிலாந்து அணியை முற்றிலுமாக வீழ்த்த காத்திருக்கிறது.

- Advertisement -

இந்த ஒருநாள் தொடருக்காக இரு அணிகளும் தற்போது தயாராகி வருகிறது. மேலும் சிறந்த அணியை இந்த தொடரில் இறக்கி இரு அணிகளுமே கடுமையாக போட்டியிடும் என்று தெரிகிறது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு ஒரு சறுக்கலாக அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

archer 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆர்ச்சர் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரின்போது காயம் அடைந்துள்ள காரணத்தினால் அவர் இந்திய அணிக்கு எதிராக எஞ்சியுள்ள 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடாமல் நாடு திரும்புவார். மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறியுள்ளார். ஆர்ச்சர் இந்த தொடருக்கான அணியில் இருந்து விலகுவது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

archer

ஏனெனில் தற்போதைய உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழும் ஆர்ச்சர் தனது அதிவேக பந்து வீச்சின் மூலம் அசத்துவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் சில பல சிக்சர்களை பறக்க விடும் ஆற்றல் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது விலகல் இங்கிலாந்து அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement