பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஸ்டீவன் ஸ்மித் நேற்று தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்றார்.பந்தை சேதப்படுத்தி தென்ஆப்பிரிக்க அணியை ஏமாற்றி வெல்ல முயற்சித்ததாக ஏற்கனவே இவர் மீது புகார் சுமத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டிருந்ததால் தென்ஆப்பிரிக்க ரசிகர்கள் பலத்த கோபத்தில் இருந்தனர்.
எனவே நேற்று விமான நிலைத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.விமான நிலையம் வந்தடைந்த ஸ்மித் விமானம் ஏறும் வரையிலும் அவரைச்சுற்றி பாதுகாப்பு வீரர்களும், காவலர்களும், ஊடகங்களும் இருந்தன.
ஒருவழியாக தென்ஆப்பிரிக்காவில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் ஸ்மித்தை காவலர்கள் பத்திரமாக அனுப்பிவைத்தனர்.முன்னதாக தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு வருடம் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதித்தது.
Plenty of media and security personnel were around for Steven Smith's departure from Johannesburg https://t.co/k31z2UACeu pic.twitter.com/tYo3XN455j
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 28, 2018
பின்னுர் ஐபிஎல் தொடரிலும் இவர்கள் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.