ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடணும்னா இதை பண்ணனும் – மான்டி பனேசர் கருத்து

Monty Panesar
- Advertisement -

எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியானது அண்மையில் பி.சி.சி.ஐ மூலம் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற வேளையில் சுப்மன் கில் தலைமையில் 18 பேர் கொண்ட இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் இதை பண்ணா போதும் : மான்டி பனேசர்

ஆனால் அண்மை காலமாகவே மிகச்சிறமான பேட்டிங் பார்மில் இருந்து வரும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. ஏனெனில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக வழிநடத்தி கோப்பையை வென்ற அவர் இந்த ஆண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். அதுமட்டும் இன்றி உள்ளூர் போட்டிகளிலும் அடுத்தடுத்த கோப்பைகளை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

ஆனாலும் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படாதது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் தாண்டி மிகச் சிறப்பான பேட்டிங் பார்மில் இருக்கும் அவர் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பான செயல்பாட்டையே வெளிப்படுத்தி இருந்தார். இப்படி அற்புதமான பார்மில் இருந்தும் அவரை இந்திய அணி கழட்டிவிட்டது நிச்சயம் அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம்.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பிடிக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஷ்ரேயாஸ் ஐயரிடம் ஸ்விங்கிங் கண்டிஷனில் விளையாடுவதற்கு பேட்டிங் டெக்னிக் இல்லை என்று நினைக்கிறேன். இங்கிலாந்து ஆடுகளங்களில் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் அதிகம் இருக்கும். அவர் பந்தினை அடித்து விளையாடும் வீரராக இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் இதுபோன்ற மைதானங்களில் மிகவும் மென்மையான கைகளால் பந்தை வரவிட்டு தாமதமாக விளையாட வேண்டும். இப்படி ஒரு டெக்னிக்கை அவர் கற்றுக் கொள்ள வேண்டும். தற்போது அவர் டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை என்றாலும் இனி டெஸ்ட் பார்மெட்டில் இடம் பிடிக்க வேண்டுமெனில் இங்கிலாந்து வந்து கவுண்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : ரன் போகுதா.. விக்கெட் விழலையா.. இவர் வந்தா போதும்.. ஜஸ்ப்ரீத் பும்ராவை – பாராட்டிய வருண் ஆரோன்

அதன்மூலம் கிடைக்கும் அனுபவங்களை வைத்து நிச்சயம் அவரால் வெகு சிறப்பாக விளையாட முடியும் என்று நினைக்கிறேன். இந்திய தேர்வுக்குழுவினரிடம் அவர் தனது திறமையை செயல்பாட்டின் மூலம் நிருபிக்க வேண்டுமெனில் இங்கிலாந்து வந்து ஒரு கவுண்டி சீசனில் விளையாடினால் நிச்சயம் அவரால் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப முடியும் என மான்டி பனேசர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement