நாலாவது டெஸ்ட் போட்டியிலும் இதுவே நடந்தா இந்திய அணியின் பாய்ண்ட்ஸை கம்மி பண்ணனும் – மான்டி பனேசர்

Panesar

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் ஸ்பின்னர்களின் ஆதிக்கமே அதிகமாக காணப்பட்டது.இதன் காரணமாக போட்டி வெறும் 2 நாட்களுக்குள் நடந்து முடிந்தது.குறிப்பாக அக்ஷர் மற்றும் அஸ்வின் ஜோடி இலங்கை அணியை மொத்தமாக கதி கலங்க வைத்தனர்.பேட்ஸமேன்ளை வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி நடையைக்கட்ட வைத்தனர்.இதன் மூலமாக இந்தியா பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ind

இந்நிலையில் இந்த போட்டி நடந்து முடிந்த பின்னரும் கூட இப்போட்டி குறித்தும், இந்த மைதானம் குறித்தும் முன்னாள் இங்கிலாந்து வீரர்கள தங்களது விமர்சனங்களை தொடர்ந்து இந்தியா மீது வைத்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் மான்டி பனேசர் தன் பங்கிற்கு சில விமர்சனங்களை இறக்கி வைத்தார். அதில் அவர் நரேந்திர மோடி ஸ்டேடியம் டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கான மைதானம் அல்ல என்று கூறியுள்ளார்.

நடந்து முடிந்த மூன்றாவதூ டெஸ்ட் போட்டி சர்வதேச டெஸ்ட் போட்டி போன்று இல்லாமல் ஏதோ கிளப் போட்டி போல நடைபெற்றது. வெறும் இரண்டு நாட்களுக்குள் நடத்தப்படும் போட்டிக்கு எதற்கு மைதானம் பேசாமல் எதாவத ஒரு பார்க்கில் இந்த போட்டியை நடத்தியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இவ்வளவு பெரிய மைதானத்தில் இரண்டு தினங்களில் போட்டி நடந்து முடிந்தது ஏமாற்றத்தை அளிக்கிறது.

axar1

மேலும் உலகின் மிகப்பெரிய மைதானமாக மிகவும் சிறப்பான வகையில் நரேந்திர மோடி மைதானம் உருவாக்கப்பட்டுள்ளதாக என்று பாராட்டு தெரிவித்தார். ஆனால் அவ்வளவு பெரிய மைதானத்தில் இரண்டு தினங்களில் நடைபெற்று முடிந்தது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
கடைசியாக பேசிய அவர் :

- Advertisement -

IND

இதேபோன்று 3ஆவது போட்டி போலவே நான்காவது போட்டியிலும் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரமாரியாக விழுந்து வெற்றிபெற்றால், இந்தியாவின் தரவரிசை புள்ளிகளை ஐசிசி குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு கூறியுள்ளார். ஏற்கனவே இந்த போட்டி குறித்தும், மைதானம் குறித்தும் ஐ.சி.சி யிடம் புகார் அளிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.