இந்திய அணியில் இனியும் இவங்க 2 பேருக்கும் வாய்ப்பு கிடைக்குறது கஷ்டம் தான் – மான்டி பனேசர் கணிப்பு

Panesar

இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர்-நவம்பர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பிளேயிங் லெவனை அனைத்து அணிகளும் தயார் செய்து வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியும் கடந்த பல தொடர்களாகவே இந்திய டி20 அணியை தயார் செய்து வருகிறது. இருப்பினும் இந்த டி20 அணியில் சிலரை நீக்கி அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை விளையாட வைக்கலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் சிலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

IND-vs-ENG

அந்தவகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர். இந்திய டி20 அணியில் செய்ய வேண்டிய சில மாற்றங்களையும் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : சாஹலுக்கும், குல்தீப் யாதவிற்க்கும் வரவிருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் கிடைப்பது கஷ்டம் தான்.

- Advertisement -

ஏனென்றால் கடந்த பல தொடர்களாகவே இருவரும் ஒயிட் பால் கிரிக்கெட்டில் சரியாக விளையாடாமல் இருப்பதே ஆகும். குல்தீப்புக்கு ஏற்கனவே அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில் சாஹலின் பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. எனவே எனக்கு தெரிந்து இவர்கள் இருவரும் உலகக்கோப்பை டி20 அணியில் விளையாடுவது கஷ்டம்.

Chahal

தற்போது நடைபெற்று பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.பி.எல் தொடரில் குல்தீப் யாதவிற்கு இதுவரை இடம் கிடைக்கவில்லை. அதேபோன்று சாஹலின் பவுலிங்கும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை எனவே டி20 உலக கோப்பை அணியில் இருவரின் இடமும் கேள்விக்குறிதான் என்றே கூறலாம். ஒருவேளை நான் விராட்கோலி நிலைமையில் இருந்தால் என்னுடைய அணியில் ஸ்பின்னர்களாக ஜடேஜா மற்றும் அஷ்வினையே தேர்ந்தெடுப்பேன் என்று அவர் கூறினார். இருவரும் அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்கள் அவர்களால் ஒயிட் பால் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியும் எனக்கூறியுள்ளார்.

- Advertisement -

jadeja

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக ஒயிட் பால் கிரிக்கெட்டில் குல்திப் யாதவ் மற்றும் சாஹல் தொடர்ந்து பங்கு பெற்று வருகின்றனர். ஆனால் கடந்த பல தொடர்களாகவே இருவரின் பர்பாமன்ஸும் குறைந்துவிட்டது என்பதே உண்மையான நிலை.

Advertisement