இந்திய வீரரான இவருக்கு எதிராக நான் வீசிய பந்து வார்னே வீசியதை விட சிறந்தது – மான்டி பனேசர் பெருமிதம்

Panesar

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே டெஸ்ட் கிரிக்கெட்டில் வீசிய பந்து ஒன்று “பால் ஆப் தி செஞ்சுரி” என்ற பட்டத்துடன் இன்றுவரை புகழப்பட்டு வருகிறது. பேட்ஸ்மேனின் இடதுபுறம் பிட்சின் ஓரத்தில் குத்திய பந்து லெக் ஸ்டம்பை தகர்த்தது. அதுவே இதுவரை கிரிக்கெட்டின் சிறந்த பந்தாக பார்க்கப்படுகிறது.

Warne

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மான்டி பனேசர் தான் வீசிய பந்து தான் கிரிக்கெட்டின் சிறப்பான பந்து என்று தெரிவித்துள்ளார். அதன்படி இங்கிலாந்து அணி கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

அந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. அந்த தொடரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர் இங்கிலாந்து அணியின் அப்போதைய சுழற்பந்து வீச்சாளரான மான்டி பனேசர்தான். இந்திய ஆடுகளில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் தனது சிறப்பான பந்து வீச்சினால் பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்தார்.

panesar

4 போட்டிகள் கொண்ட அந்த தொடரின் 3 போட்டிகளில் விளையாடி பனேசர் அந்த தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதிலும் மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் சச்சினை அவுட்டாக்கிய விதம் மிகவும் சிறப்பாகவே இருந்தது. இந்நிலையில் அந்த பந்து குறித்து பேசிய அவர் : வார்னேவின் பந்தை விட அன்று சச்சினுக்கு எதிராக வீசிய அந்த பந்து சிறப்பான பந்து.

- Advertisement -

Panesar 1

சச்சின் நான் வீசிய அந்த பந்தின் லெந்த்தை கணிக்க முடியாமல் அவுட் ஆனார் என பனேசர் தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த பந்து என்று கருதப்படும் வார்னேவின் விட எனது பந்துவீச்சே சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.