தோனி அதிகம் பேசமாட்டார். பில்டப் லாம் கொஞ்சமும் இல்ல எல்லாமே சைகை தான் – மான்டி பனேசர் பேட்டி

Panesar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாக தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென தனது ஓய்வை அறிவித்து விட்டு விடைபெற்று விட்டார். இவருக்கு 39 வயதாகிவிட்டது.. இதன் காரணமாக பல கிரிக்கெட் வீரர்கள் அவருடன் உடனான நினைவுகளைப் பற்றிப் பேசி வருகின்றனர். இந்திய வீரர்கள் மட்டுமல்லாது அவருக்கு எதிராக ஆடிய எதிர் அணி வீரர்களும் அவருடன் நடந்த அரிய சிறப்பான சம்பவங்களை பற்றி பேசி வருகின்றனர்.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவின் பஞ்சாபில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக சுழற்பந்து வீச்சாளராக விளையாடிய மாண்டி பனேசர் தோனி குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்…

தோனி மிக மிக அமைதியானவர். அவர் அதிகம் பேசியதை நான் பார்த்ததில்லை. எப்போதும் சைகையால் பேசிவிடுவார். அவர் அப்படித்தான் என நான் நினைக்கிறேன். நாம் என்ன பேசினாலும் அவர் அதற்கு ரிப்ளை கொடுக்கமாட்டார். அது மிகவும் கடினம். ஆனால் பேட்டிங் செய்ய வரும்போதும் ஆடுகளத்தில் கேப்டனாக இருக்கும் போதும் வேற லெவலில் வேலை செய்வார்.

panesar

பொதுவாகவே விக்கெட் கீப்பராக இருக்கும் போது பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி அறிவுரை கூறுவார். அதிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்றால் சொல்லவே தேவை இல்லை. அதைபோல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே டெஸ்ட் போட்டியில் நான் பேட்டிங் செய்து கொண்டிருந்ததேன். சுழல் பந்து வீச்சாளர்களுக்கு இந்தி மொழியில் டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

Panesar

எனக்கு இந்தி தெரியாது என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. ஆனால் அவர் கூறியதை அனைத்தையும் நான் புரிந்துகொண்டேன் இருந்தாலும் எனக்கு புரியாதது போலவே நடித்துக் கொண்டு அவர் கூறியதை கேட்டுக்கொண்டிருந்தேன். பஞ்சாபி மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் நான் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்து கொண்டிருந்தேன் என்று தெரிவித்துள்ளார் மான்டி பனேசர்.

Advertisement