இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இவர்தான் ஆபத்தான பவுலராக இருக்க போகிறார் – மான்டி பனேசர் எச்சரிக்கை

Panesar
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வருகிற 18ஆம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் மீதே உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை உள்ளது. இந்த இறுதிப்போட்டியில் எந்த பேட்ஸ்மேன் சிறப்பாக ரன் குவிப்பார் ? எந்த பவுலர் சிறப்பாக பந்துவீசுவார் ? எந்த அணி வெற்றி பெரும் ? என இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் நாளுக்கு நாள் இந்த இறுதிப்போட்டி குறித்த செய்திகள் அதிகம் வெளியாகி வருகின்றன.

INDvsNZ

நாளுக்கு நாள் இந்த இறுதிப்போட்டி குறித்து பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருபுறம் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதேவேளையில் சாஃப்ட் குவாரன்டைனை முடித்த இந்திய அணி தங்களுக்குள்ளேயே 2 அணிகளை பிரித்து கடுமையாக பயிற்சி செய்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் எந்த பவுலரிடம் திணறுவார்கள் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மான்டி பனேசர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான டீம் சவூதிக்கு எதிராக நிச்சயம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என்று நினைக்கிறேன்.

Southee-3

ஏனெனில் ஏஜஸ் பவுல் மைதானத்தில் வேகப்பந்து வீச்சில் நல்ல ஸ்விங் கிடைக்கும். அதன்படி சவுதி வீசும் பந்துகள் துல்லியமாகவும், நல்ல வேகத்தில் ஸ்விங் ஆகி செல்லும். எனவே அவரது பந்து வீச்சு இந்தியனின் பேட்ஸ்மேன்களுக்கு சற்று அபாயகரமானதாக இருக்கும். எனவே அவரது பந்துவீச்சை இந்திய அணியின் வீரர்கள் கணித்து விளையாட வேண்டும். இல்லையென்றால் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேற வேண்டியிருக்கும் என இந்திய பேட்ஸ்மேன்களை மான்டி பனேசர் எச்சரித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த இறுதிப் போட்டியில் என்னை பொறுத்தவரை நியூசிலாந்து அணிக்கு சாதகம் அதிகம் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் அணியில் இந்திய அணியை விட சற்று அதிக வேரியேஷன்களில் வீசும் பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி நல்ல பேட்ஸ்மேன்களும் இருக்கின்றனர். இருந்தாலும் நியூசிலாந்து அணியை சமாளிக்க இந்திய அணி கடுமையான சவால் அளிக்கும் என்றும் பனேசர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement