இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றால் கோலி நிச்சயம் காலி – மான்டி பனேசர் கருத்து

Panesar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணி அபாரமாக வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 13ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே இந்த தொடரை குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மான்டி பனேசர் இந்த தொடர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் இந்த டெஸ்ட் கோப்பைக்கான பெயரை மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்தியா சார்பாக டெண்டுல்கரும் இங்கிலாந்து சார்பாக குக்கும் அதிக ரன்கள் குவித்து உள்ளதால் அவர்களை கௌரவிக்கும் விதமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரை “டெண்டுல்கர் குக்” கோப்பை என மாற்ற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் இந்த தொடருக்கு “அந்தோணி டி மெல்லோ” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்து சென்று விளையாடினால் “Pataudi” கோப்பை என சொல்லப்படுகிறது. இதனை மாற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள இந்த கருத்திற்கு ரசிகர்களும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

kohli

அதுமட்டுமின்றி கோலியின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை என்றும் ரஹானேவின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதால் கோலி தற்போது அழுத்தத்தில் இருக்கிறார் என்றும் அடுத்த போட்டியில் இந்திய அணி ஒரு வேளை தோல்வி அடைந்தால் கோலியின் கேப்டன் பதவி பறி போகும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rahane

ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரை ரஹானே தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியதும் ரஹானேவை இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக மாற்ற வேண்டும் என்று குரல் எழுந்தவேளையில் தற்போது முதல் போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் கோலிக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement