கவலையே பட வேணாம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்ல ஜெயிக்கபோறது இவங்கதான் – பனேசர் கணிப்பு

Panesar

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே ஜூன் 18-ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. ஐசிசி நடத்திய இந்த தொடரின் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த போட்டிக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்த போட்டியில் மீதான எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

INDvsNZ

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து வந்தடைந்த இந்திய அணி மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு பயிற்சியை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து 18 ஆம் தேதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கெதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது யார் என்பது குறித்த கருத்துக்களை முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், பிரபலங்கள் என பலரும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மான்டி பனேசர் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

INDvsNZ

நியூசிலாந்து அணி இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதால் அவர்களுக்கு கண்டிப்பாக இந்த போட்டிகள் உபயோகமாக அமையும். ஒருவேளை அந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் அவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். அதே நம்பிக்கையுடன் இந்திய அணியை எளிதாக சந்திப்பார்கள் ஆனால் ஒருவேளை அவர்கள் தோற்றால் அவர்களது நம்பிக்கை குறையும். அதன் காரணமாக இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.

- Advertisement -

ind

நியூசிலாந்து அணி நல்ல அணி தான் என்றாலும் வெளிநாடுகளில் பெரிய அளவில் வெற்றி பெற்றது இல்லை. ஆனால் இந்திய அணியோ கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மேலும் எந்த ஒரு கண்டிஷனிலும் சிறப்பாக விளையாடும் தன்மையும் கொண்டு இருக்கிறது. எனவே கடினமான கண்டிஷன்களில் சிறப்பாக விளையாடும் அணியே இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் என மான்டி பனேசர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement