கில், பாண்டியா இல்லை.. இவர் தான் கம்பீரின் இந்திய டி20 அணியின் புதிய கேப்டன்.. மான்டி பனேசர் கணிப்பு

Monty Panesar
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருந்த சுப்மன் கில் கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்டது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடும் அவர் கடைசி 18 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் மோசமான ஃபார்மில் இருக்கிறார்.

அதனால் இந்திய அணியை விட யாரும் முக்கியமில்லை என்று கருதிய தேர்வுக்குழு கடைசி நேரத்தில் அவரை கழற்றி விட்டுள்ளது. அதன் காரணமாக சுப்மன் கில்லை இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக வளர்ப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இனிமேல் இந்திய டி20 அணியில் மீண்டும் விளையாடுவதற்கே கில் ஐபிஎல் தொடரில் அதிரடியாக பெரிய ரன்கள் குவித்து தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -

கம்பீரின் அடுத்த டி20 கேப்டன்:

மறுபுறம் 35 வயதாகும் சூரியகுமார் யாதவ் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு 2026 டி20 உலகக் கோப்பையுடன் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அப்போது தான் 2028 டி20 உலகக் கோப்பைக்கு புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணியை உருவாக்க முடியும். அது போன்ற சூழ்நிலையில் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

கடைசியாக 2024இல் சூரியகுமார் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் ஹர்திக் பாண்டியா கேப்டனாக வருவதற்கான வாய்ப்பைக் கொண்டிருந்தார். எனவே ஹர்டிக் பாண்டியா மீண்டும் கேப்டன்ஷிப் பொறுப்பை பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஆல் ரவுண்டர்களை விரும்பக்கூடிய கௌதம் கம்பீர் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக அக்சர் படேலை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பனேசர் கணிப்பு:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் ஆல் ரவுண்டர்களை விரும்புகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் டி20 போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் பங்காற்றக்கூடிய வீரர்களுக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அது போன்ற ஆல் ரவுண்டர் வீரர்களுடன் கம்பீர் கச்சிதமாக உணர்கிறார்”

இதையும் படிங்க: சஞ்சு சாம்சனா? இஷான் கிஷனா? டி20 உலக கோப்பையில் துவக்க வீரர் யார்? – விவரம் இதோ

“எனவே ஒருவேளை இந்தியா 2026 டி20 உலகக்கோப்பை வெல்லாமல் போனால் அக்சர் பட்டேல் புதிய கேப்டனாக வருவார் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார். ஏற்கனவே 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அக்சர் பட்டேல் தற்போது அணியின் துணைக் கேப்டனாக இருக்கிறார். அது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக இருக்கும் அவரை இந்திய அணியின் தலைவராக கௌதம் கம்பீர் தேர்ந்தெடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement