டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இவங்க 2 பேரும் விளையாடுறது ரொம்ப கஷ்டம் – மான்டி பனேசர் வெளிப்படை

Panesar
- Advertisement -

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பிளேயிங் லெவனை அனைத்து அணிகளும் தயார் செய்து வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியும் கடந்த பல தொடர்களாகவே இந்திய டி20 அணியை தயார் செய்து வருகிறது. இருப்பினும் இந்த டி20 அணியில் சிலரை நீக்கி அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை விளையாட வைக்கலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் சிலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

IND-vs-ENG

அந்தவகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர். இந்திய டி20 அணியில் செய்ய வேண்டிய சில மாற்றங்களையும் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : இந்த ஐபிஎல் தொடர் என்பது சாஹலுக்கும், குல்தீப் யாதவிற்க்கும் வரவிருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடிக்க ஒரு விஷப்பரீட்சை போன்றது. அதில் அவர்கள் சொதப்பினால் அவர்களது இடம் காலி.

- Advertisement -

ஏனென்றால் கடந்த பல தொடர்களாகவே இருவரும் ஒயிட் பால் கிரிக்கெட்டில் சரியாக விளையாடாமல் இருப்பதே ஆகும். குறிப்பாக சாஹலின் பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. எனவேதான் இந்த ஐபிஎல் தொடர் இருவருக்கும் ஒரு விஷப் பரீட்சை என்று நான் கூறுகிறேன்.

Chahal

ஒருவேளை இத்தொடரில் சிறப்பாக செயல்படாத பட்சத்தில் டி20 உலக கோப்பை அணியில் இருவரின் இடமும் கேள்விக்குறியான ஒன்றாக மாறிவிடும். ஒருவேளை நான் விராட்கோலி நிலைமையில் இருந்தால் என்னுடைய அணியில் ஸ்பின்னர்களாக ஜடேஜா மற்றும் அஷ்வினையே தேர்ந்தெடுப்பேன் என்று அவர் கூறினார். இருவரும் அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்கள் அவர்களால் ஒயிட் பால் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியும் எனக்கூறியுள்ளார்.

jadeja

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக ஒயிட் பால் கிரிக்கெட்டில் குல்திப் யாதவ் மற்றும் சாஹல் தொடர்ந்து பங்கு பெற்று வருகின்றனர். ஆனால் கடந்த பல தொடர்களாகவே இருவரின் பர்பாமன்ஸும் குறைந்துவிட்டது என்பதே உண்மையான நிலை.

Advertisement