இங்கிலாந்து அணிக்கு இந்திய வீரரான இவர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் – மான்டி பனேசர் கருத்து

Panesar

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட போகிறது. இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட போகிறது.
இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும் 13-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 2-வது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது. இதற்காக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சென்னை மைதானத்தில் தீவிர பயிற்சி செய்து வருகிறது. இதற்கு முன்னதாக இரு அணி வீரர்களும் ஆறு நாட்கள் நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தபடுவார்கள். பின்னர் மூன்று தினங்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிக முக்கிய பங்கு வகிப்பார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது….
ஆஸ்திரேலிய தொடரில் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்திற்கு எதிராகவும் நம்பிக்கையுடன் பந்து வீசுவார்.

டெஸ்ட் தொடரில் எப்போதும் அஸ்வின் இந்திய அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா இல்லாத நேரத்தில் அவருக்கு மாற்றாக ஒரு வீரர் வந்தால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஏற்றவாறு பந்து வீச வேண்டும். இந்த இடத்தை அக்ஷர் பட்டேல் சரியாக பிடித்துக் கொள்வார் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் மாண்டி பனேசர்.

- Advertisement -

ashwin

தற்போது 34 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 377 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 27 முறை 5 விக்கெட்டுகளும் 7 முறை 10 விக்கெட்டுகளும் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.