
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த வெற்றிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்து ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் உலகிலேயே 38 வயதில் ஒரே போட்டியில் சதமும் 5 விக்கெட்டுகளும் எடுத்த வீரராக அஸ்வின் உலக சாதனை படைத்தார்.
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவில் பிறந்ததால் தப்பித்ததாக முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் கூறியுள்ளார். ஒருவேளை ஆங்கிலேயராக இருந்தால் இங்கிலாந்து அணி அவரை 35 வயதிலேயே ஓய்வு பெற வைத்திருப்பார்கள் என்று மான்டி பனேசர் கூறியுள்ளார். இந்திய வம்சாவளி வீரரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“இங்கிலாந்து அதிகமாக சோதனைகளை செய்கிறது. ஒருவேளை அஸ்வின் ஆங்கிலேயராக இருந்தால் அவரை முன்னதாகவே ஓய்வு பெறச் சொல்லியிருப்பார்கள். ஏனெனில் அவர்கள் இளம் வீரர்களை கொண்டு வந்து வேகமாக விளையாடுவதை விரும்புகிறார்கள். அந்த வகையில் சோதனைகளை அதிகமாக செய்யும் இங்கிலாந்து சோதனை செய்வதை விரும்புகிறார்கள்” என்று கூறினார்.
இருப்பினும் இப்போதும் இந்திய அணியில் வெளிநாட்டுப் போட்டிகளில் அஸ்வினுக்கு நிலையான வாய்ப்பு கிடைப்பதில்லை. அதே சமயம் இங்கிலாந்து அணி ஜேம்ஸ் ஆண்டர்சன் 42 வயது வரை விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக உலக சாதனை படைக்க வாய்ப்பு கொடுத்தது. அத்துடன் ரவிச்சந்திரன் அஸ்வினை விட ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் சுழலுக்கு சாதகமற்ற மைதானங்களிலும் அசத்தக்கூடிய சிறந்த ஸ்பின்னர் என்று மான்டி பனேசர் கூறியுள்ளார்.
ஆனால் சொந்த மண்ணில் பேட்ஸ்மேன்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கணித்து விக்கெட்டுகளை எடுப்பதில் அஸ்வின் வல்லவர் என்றும் பனேசர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “என்னுடைய கருத்துப்படி நேதன் லயனை சிறந்தவராக பார்க்கிறேன். ஆனால் அஸ்வின் இந்தியாவில் சிறந்த பவுலர்”
இதையும் படிங்க: 26 – 34 வயசுல முடிஞ்சுரும்.. சாஸ்திரி, சச்சினை பாருங்க.. விராட், ரோஹித் விளையாட இதை செய்யனும்.. கபில் தேவ்
“அஸ்வின் பந்து வீசும் போது தன்னை ஒரு பேட்ஸ்மேனாக நினைத்துக் கொள்கிறார் என்று நினைக்கிறேன். அதனால் பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை கண்டறிந்து அதற்கு தகுந்தார் போல் பந்து வீசுவது அஸ்வினுடைய பெரிய சாதகமாகும். அதே போல பேட்டிங்கிலும் அசத்தும் அவர் பந்து வீசும் போது பேட்ஸ்மேன்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்து செயல்படுகிறார்” என்று கூறினார்.