- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய ஜாம்பவான்கள் பிசிசிஐக்கு புத்திமதி சொல்லுங்க.. இல்லனா விளைவுகளை சந்திப்பீங்க.. மொய்ன் கான் பேட்டி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி வரும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக தங்களுடைய நாட்டில் நடைபெறும் அந்த தொடரை வெற்றிகரமாக நடத்த பாகிஸ்தான் தயாராகி வருகிறது. அதற்காக தங்கள் நாட்டில் உள்ள மைதானங்களை பாகிஸ்தான் வாரியம் புதுப்பித்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு வந்து இந்தியா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுமா என்ற கவலை அந்நாட்டவர்களிடம் காணப்படுகிறது.

ஏனெனில் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. எனவே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா விளையாடினால் தான் பாகிஸ்தானுக்கு நிறைய ஸ்பான்சர்ஷிப் மற்றும் வருமானம் கிடைக்கும். ஆனால் எல்லைப் பிரச்சினை காரணமாக 2008 முதல் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா மொத்தமாக நிறுத்தியுள்ளது.

- Advertisement -

புத்திமதி சொல்லுங்க:

மேலும் பாகிஸ்தானில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் பங்கேற்காத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது. அதே போல 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ் போன்ற இந்திய ஜாம்பவான்கள் பாகிஸ்தானுக்கு சென்று நாம் விளையாட வேண்டுமென பிசிசிஐக்கு அறிவுரை கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் மொய்ன் கான் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாட வரவில்லையெனில் இந்தியாவில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட பாகிஸ்தானும் வராத விளைவை சந்திக்க நேரிடும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய பார்வையில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் விளையாட்டை அரசியலில் இருந்து தனியாக வைக்க வேண்டுமென பிசிசிஐக்கு ஆலோசனை கொடுக்க வேண்டும்”

- Advertisement -

பாகிஸ்தான் வராது:

“உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடுவதை பார்க்க விரும்புகின்றனர். அது பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி மொத்த விளையாட்டுக்கும் நன்மையை ஏற்படுத்தும். எனவே ஐசிசி நடத்தும் இந்த தொடருக்கு பிசிசிஐ கௌரவம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வருங்காலங்களில் இந்தியாவில் நடைபெறும் தொடர்களில் பாகிஸ்தானும் அதே முடிவை எடுக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: கவலைப்படாதீங்க.. ரோஹித் மும்பையை விட்டு போகமாட்டாரு.. காரணம் இது தான்.. பிரக்யான் ஓஜா நம்பிக்கை

இந்த சூழ்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஐசிசி அமைப்பின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் மாதம் அவர் ஐசிசி தலைவராக பொறுப்பேற்க உள்ளார். எனவே கண்டிப்பாக பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாட அவர் சம்மதிக்க மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -