- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் 2027 வேர்ல்டுகப் சான்ஸ் உறுதி.. சிராஜிக்கு – கிடைத்திருக்கும் வாய்ப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்போது சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி விளையாடயிருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது பெர்த் மைதானத்தில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

முகமது சிராஜுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு :

இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் முகமது சிராஜ் இந்திய அணியை பந்துவீச்சு துறையில் வழிநடத்துவார். அவருக்கு உறுதுணையாக அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement -

இதில் முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்கள் என்பது உறுதி. அதிலும் குறிப்பாக ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள முகமது சிராஜ் இம்முறை ஒருநாள் போட்டிகளிலும் அசத்தும் பட்சத்தில் இந்திய ஒருநாள் அணியில் தொடர்ந்து நீடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

இந்த ஆஸ்திரேலிய தொடரில் அவர் அசத்தினால் 2027 ஒருநாள் உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏனெனில் தற்போதைக்கு இந்திய ஒருநாள் அணியை பொறுத்தவரை பும்ரா மட்டுமே உறுதியான இடத்தினை பிடித்துள்ளார். மற்றபடி வேறுயெந்த பவுலரும் உறுதியான இடத்தினை பிடிக்கவில்லை.

- Advertisement -

அதோடு அணியில் இடம்பெறும் வேகப்பந்து வீச்சாளர்களும் அடிக்கடி காயத்தை சந்திக்கின்றனர். ஆனால் முகமது சிராஜை பொறுத்தவரை அவர் காயத்தால் பெரும்பாலும் பாதிக்கப்படுவதில்லை. அதனால் இந்த ஆஸ்திரேலிய தொடரில் அவர் தனது திறனை வெளிப்படுத்தி விட்டால் நிச்சயம் 2027 உலககோப்பை அணிக்கான திட்டத்தில் அவர் சேர்க்கப்படுவார்.

இதையும் படிங்க : விராட், ரோஹித் கம்பேக்கில் விளையாட வரும் மழை? முதல் ஒன்டே நடைபெறும் பெர்த் வெதர் ரிப்போர்ட்

இந்திய அணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான முகமது சிராஜ் இதுவரை 44 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -