காபா டூ பர்மிங்காம்.. பும்ரா இல்லனா விஸ்வரூபம்.. 3 கோட்டைகளை இந்தியா உடைக்க உதவிய சிராஜ்

Mohamemed Siraj
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் இந்தியா பரிதாபமாக தோற்றது ஆனால் அதற்கும் சேர்த்து இரண்டாவது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா பர்மிகாம் மைதானத்தில் இங்கிலாந்தை தோற்கடித்த முதல் ஆசிய அணி என்ற சரித்திரத்தைப் படைத்தது.

அந்த வெற்றிக்கு பேட்டிங்கில் சுப்மன் கில் 269, 161 ரன்களும் பந்து வீச்சில் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளையும் எடுத்து முக்கிய பங்காற்றினர். அதே போல பும்ரா இல்லாத நேரத்தில் பொறுப்புடன் செயல்பட்ட முகமது சிராஜ் 7 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். 2020 ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமான சிராஜ் தம்முடைய தந்தை இயற்கை எய்திய போது கூட நாடு திரும்பாமல் இந்தியாவுக்காக விளையாடியதை மறக்க முடியாது.

- Advertisement -

காபா, கேப் டவுன், பார்மிங்காம்:

குறிப்பாக காபாவில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த அவர் 5 விக்கெட்டுகளை (5-73) எடுத்தார். அதனால் காபா கோட்டையை தகர்த்த இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 2 – 1 (4) என்ற கணக்கில் ரகானே தலைமையில் கோப்பையையும் வென்றது. அடுத்ததாக 2024 கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை மிரட்டிய சிராஜ் 15 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதன் வாயிலாக கேப் டவுன் மைதானத்தில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இந்தியா சாதனை படைத்தது. தற்போது பர்மிங்காம் மைதானத்தில் சிராஜ் 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அங்கேயும் முதல் முறையாக இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது. ஆச்சரியப்படும் வகையில் சேனா நாடுகளில் மேற்குறிப்பிட்ட 3 போட்டிகளில் மட்டுமே சிராஜ் தம்முடைய டெஸ்ட் கேரியரில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

- Advertisement -

வெளிப்படும் விஸ்வரூபம்:

அந்த 3 போட்டிகளிலுமே இந்தியா எதிரணிகளின் கோட்டையை உடைத்து முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. இது போக பும்ராவுடன் சேர்ந்து சிராஜ் தம்முடைய கேரியரில் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்தப் போட்டிகளில் 33.82 என்ற சராசரியைக் கொண்டுள்ள அவர் பும்ரா இல்லாமல் விளையாடி 5 போட்டிகளில் 25.20 என்ற சிறப்பான சராசரியில் பவுலிங் செய்துள்ளார்.

இதையும் படிங்க: ஜோ ரூட்டை ஏமாற்றி நோ-பாலில் அவுட்டாக்கினாரா ஆகாஷ் தீப்? இங்கிலாந்தின் விமர்சனத்துக்கு எம்சிசி பதில்

ஷமி, பும்ரா ஆகிய இருவரும் இல்லாமல் விளையாடிய 12 போட்டிகளில் 22.27 என்ற சராசரியில் சிராஜ் இன்னும் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார். இதிலிருந்து பொறுப்புடன் பவுலிங் செய்ய வேண்டிய சூழ்நிலைகளில் சிராஜ் தம்முடைய சுயமான விஸ்வரூபத்தை வெளிப்படுத்துகிறார் என்றே சொல்லலாம். இதைத்தொடர்ந்து மூன்றாவது போட்டி ஜூலை 10ஆம் தேதி துவங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement