ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது சிராஜ் இடம்பெறாதது ஏன்? – விவரம் இதோ

Siraj
- Advertisement -

2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த வகையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய கோப்பை தொடரில் முகமது சிராஜ் இடம்பெறாதது ஏன்? :

அவர்கள் இருவரின் கீழ் 13 நபர்களையும் சேர்த்து மொத்தம் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல் வெளியானது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியலில் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இடம் பெறாதது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, கேள்வியையும் எழுப்பிள்ளது.

- Advertisement -

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் அவர் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான டி20 அணியில் நிச்சயம் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் முகமது சிராஜ் இப்படி ஆசிய கோப்பை தொடரில் இடம்பெறாததற்கு காரணம் யாதெனில் : அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளிலும் விளையாடியிருந்த முகமது சிராஜ் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

மற்ற வீரர்கள் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொண்டாலும் முகமது சிராஜ் தொடர்ச்சியாக விளையாடியிருந்தார். அதன் காரணமாக அவருக்கு ஓய்வளிக்கும் விதமாக இந்த ஆசிய கோப்பை தொடரில் அவரை சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக விளையாடி வருவதாலும் டி20 அணியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : பொறுமையா இருங்க ஸ்ரேயாஸ் ஐயர்.. கில் வந்தா என்ன? உங்களுக்கு அந்த 2 வாய்ப்பும் கிடைக்கும்.. பதான் நம்பிக்கை

டி20 அணியை பொருத்தவரை முற்றிலும் இளம் வீரர்கள் மட்டுமே பங்கேற்று வரும் வேளையில் முக்கியமான தொடர்களில் சிராஜை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதனால் தற்போது இளம் வீரர்களுடன் பும்ராவை கொண்டு வந்துவிட்டு முகமது சிராஜ்க்கு நிர்வாகம் ஓய்வு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement