- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஏன் போறீங்க பாய்.. அதை செஞ்சா யாரை கட்டிப் பிடிப்பேன்னு பும்ராவிடம் கேட்டேன்.. சிராஜ் நெகிழ்ச்சி பேட்டி

ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31 முதல் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 224 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து 247 ரன்கள் குவித்து 23 ரன்கள் முன்னிலையாகப் பெற்றது.

இந்தியாவுக்கு பேட்டிங்கில் அதிகபட்சமாக கருண் நாயர் 52, சாய் சுதர்சன் 38 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக பந்து வீச்சில் கஸ் அட்கின்ஷன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இங்கிலாந்துக்கு பேட்டிங்கில் அதிகபட்சமாக பென் டக்கெட் 43, ஜாக் கிராவ்லி 64, ஹாரி ப்ரூக் 53 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

- Advertisement -

அசத்திய சிராஜ்:

அடுத்ததாக விளையாடும் இந்திய அணி 2வது நாள் முடிவில் 75/2 ரன்களை எடுத்துள்ளது. முன்னதாக இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா எதிர்பார்த்ததைப் போலவே விளையாடவில்லை. வித்தியாசமான பவுலிங் ஆக்சன் கொண்டிருப்பதால் காயத்தைத் தவிர்த்து பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக இத்தொடரில் அவர் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்டது.

அதன் படி 1, 3, 4வது போட்டிகளில் விளையாடிய அவர் கடைசிப் போட்டியில் விளையாடாமல் இந்திய அணியிலிருந்து வெளியேறினார். மறுபுறம் பும்ரா விளையாடாத காரணத்தால் பொறுப்புடன் செயல்பட்ட சீனியர் பவுலர் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அத்துடன் 18* விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸை முந்தி இத்தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராகவும் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

நெகிழ்ச்சியான சிராஜ்:

இந்நிலையில் நீங்கள் போய்விட்டால் இப்போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த பின் யாரை கட்டிப்பிடித்து கொண்டாடுவேன் என்று ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய அணியிலிருந்து வெளியேறிய போது கேட்டதாக சிராஜ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் ஏன் செல்கிறீர்கள்? நான் 5 விக்கெட்டுகளை எடுத்தால் யாரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடுவது என்று ஜஸி பாயிடம் (பும்ரா) கேட்டேன்”

இதையும் படிங்க: இங்கிலாந்து மண்ணில் 5 ஆவது இந்திய ஜோடியாக மாபெரும் சாதனையை நிகழ்த்திய – சிராஜ் மற்றும் பிரசித்

“அதற்கு நீங்கள் 5 விக்கெட்டுகளை எடுங்கள், நான் இங்கே இருப்பேன் என்று பும்ரா சொன்னார்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து இந்திய அணி 2வது இன்னிங்ஸில் பொறுப்புடன் பேட்டிங் செய்து 300+ ரன்களை இலக்காக நிர்ணயிக்க முயற்சிக்க உள்ளது. இருப்பினும் சூழ்நிலைகள் அதற்கு சவாலாக இருப்பதால் இந்தியா 300+ ரன்களை இலக்காக நிர்ணயிக்குமா என்பதை கொடுத்திருந்தே பார்க்க வேண்டும்.

- Advertisement -