
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 82 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவித்தது.
அதனை தொடர்ந்து 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 14.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக குஜராத் அணி 82 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிஸோ ரபாடா மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியில் 3 ஓவர்களை வீசிய முகமது சிராஜ் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
அப்படி அவர் எடுத்த ஒரு விக்கெட் மூலம் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : என்னோட தற்போதைய இலக்கு இதுமட்டும் தான்.. அதைத்தவிர வேற எதையும் யோசிக்கல – புவனேஷ்வர் குமார் பளீச்
நேற்றைய போட்டியின் முதல் ஓவரை வீசிய அவர் முதல் 3 பந்துகளில் ரன் கொடுக்காமல் நான்காவது பந்தில் டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்க வைத்தார். இதன்மூலம் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரின் முதல் ஓவரை விக்கெட் மெய்டனாக வீசினார். இந்த ஐபிஎல் தொடரில் எந்த ஒரு வீரரும் முதல் ஓவரில் விக்கெட் மெய்டன் எடுக்காத வேளையில் இந்த சாதனையை பதிவு செய்த முதல் வீரராக முகமது சிராஜ் தனது பெயரை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.